ஒரே ஒரு விஷயம்.....
இந்தத் தேர்தலில் என் மனதைப் பாதித்தது ஒரே ஒரு விஷயம் மட்டும்தான்!...
ஆதாவது கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதியான உதயகுமார் அவர்கள் தேவை இல்லாமல் அவசரப்பட்டு ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக்கொண்டு வேடமும் தரித்துத் தன்னையும் தனது மகத்தான போராட்டத்தையும் சிறுமைப் படுத்திக் கொண்டார் என்பதே!...
அவரைப் பொருத்தவரை அணுசக்திப் பயன்பாட்டுக்கு எதிரான போராட்டத்தை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்வார் என்று மிகவும் எதிர்பார்த்தேன்!
அந்த எதிர்பார்ப்பும் வீணாய்ப் போயிற்று!
அவர் மீண்டும் முந்தைய மதிப்புக்குரிய இடத்தை அடைவாரா?....
No comments:
Post a Comment