நன்றி! நன்றி!! நன்றி!!!
தேர்தல் கமிஷனின் சிறப்பான செயல்பாட்டால்.....
கடந்த தேர்தலில் கிரிமினல்கள் யாரும் தேர்தலில் நிற்க முடியவில்லை....
கோடி கோடியாகப் பணம் வைத்திருப்பவர்களின் பப்பு வேகவில்லை!
நல்லவர்களும் நாட்டுப் பற்று மிக்கவர்களும் மட்டுமே தேர்தலில் நிற்கவும் வெற்றிபெறவும் முடிந்தது!....
லஞ்சம் என்பது ரசத்துக்குப் போடும் இஞ்சி அளவுகூடக் கொடுக்கப்படவும் இல்லை. வாங்கப் படவும் இல்லை!...
சின்னஞ் சிறு முறைகேடுகள் கூட நடக்காததால் இவ்வளவு பெரிய நாட்டில் இத்தனை மக்கள் வாக்களித்தும் இத்தனைபேர் தேர்தலில் நின்றும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது!...
வங்கிக்குப் பணம் கொண்டு சென்றவர்கள், வியாபாரத்துக்குக் கொண்டு சென்றவர்கள், சம்பளம் பட்டுவாடா செய்யச் சென்றவர்கள் போன்ற பயங்கரக் குற்றவாளிகளிடம் இருந்து நிறையப் பணமும் தங்கமுமாகப் பறிமுதல் செய்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர்!....
கடைசி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களுக்குச் சென்று சேரவேண்டிய நன்மைகள் தடங்கலின்றிப் போய்ச் சேர அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்!....
இத்தனை நன்மைகளையும் செய்த தேர்தல் கமிஷனுக்கு இந்திய நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!...
No comments:
Post a Comment