ss

Monday, June 9, 2014

எனது மொழி ( 165 )

பட்டாலும் தெரியாதா?....

பட்டால் தெரியும் என்பார்கள்! 

மனிதர்களுக்கு அப்படிப் பட்டும் தெரியாமல் போவதில் அர்த்தம் இருக்கிறது! 

காரணம் அவனுடைய குறைபாடுள்ள குணம்!...

ஆனால் அந்தக் குணம் இறைவனுக்கு இருக்ககலாமா ?

மக்கள் நம்பும் புராணக் கதைகளில் வரும் இறைவன் அரக்கர்கள் தவம் இருந்தால் கேட்டவரம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொடுமையான வரம் கேட்பதும் இவர்கள் வாக்குக் கொடுத்துவிட்டோமே என்று வரம் கொடுத்துவிட்டு விழிப்பதாகவும் வருகின்றது!... 

ஒரு தடவை அப்படிப்பட்ட வரம் கொடுத்துவிட்டுச் சிக்கிச் சீக்கி அடித்தபின்னும் மீண்டும் மீண்டும் ஏன் அப்படி ஒரே மாதிரித் தவறுகளைச் செய்கிறார்கள்?

அது கடவுளை அறிவாற்றல் இல்லாத ஒருவராகச் சித்தரிப்பது ஆகாதா?....

ஆதாவது கடவுள் சம்பந்தப் பட்ட அனைத்துக் கோட்பாடுகளையும் வகுத்தவன் மனிதனே!

அதேபோலக் கடவுளர்களுக்கு மனிதனின் மற்றும் அவன் வாழும் உலகில் அவனோடு தொடர்புடைய பலவற்றின் வடிவங்களையும் பண்புகளையும் ஏற்றியவனும் மனிதனே!

அதனால் அவனுடைய தேவைக்கும் அறிவுக்கும் ஏற்ப கடவுளர்களைப் பற்றிய கதைகளை எழுதுவதும் காலப்போக்கில் அதை உண்மைபோல் மக்கள் நம்புவதும் இன்றளவில் நீடிக்கும் பண்பாடாகும்.

இது மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும் குணம் ஆகும்!....

அண்டசராசரம் அத்தனையுமாக இருப்பது இறை அல்லது பரம்பொருள்,அதன் உட்கூறுகள்தான் மற்ற அனைத்தும், நாமும் நாம் வாழும் உலகமும் அதன் ஒரு சின்னஞ்சிறு அங்கமே , நாம் சிறப்பாக வாழ்வதே நம்மை உள்ளடக்கிய பரம்பொருளுக்கு நாம் ஆற்றும் சிறப்பான கடமை அல்லது பங்களிப்பு என்பதை உணர்ந்தால் இத்தகைய முரண்பட்ட போக்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எல்லாம் இடம் இல்லை!.

No comments:

Post a Comment