மத மாற்றம்
உலகில் பல மதங்கள் உள்ளன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
ஆனால் ஒவ்வொன்றுமே தான் அனைத்து உலக மக்களுக்கான மதம் என்றே பறை சாற்றுகின்றன.
அதன் பொருள் என்ன?
தன்னைத் தவிர மற்ற மதங்கள் தவறான கோட்பாடுகளைக் கொண்டுள்ளன.
அவற்றைப் பின்பற்றி மனிதன் சொர்கத்தை அடைய முடியாது அல்லது நிறைவான வாழ்வை வாழ முடியாது!
அதனால் அனைத்து உலக மக்களும் தனக்குக் கீழ் அணிவகுத்து ஒப்பற்ற இறைவனின் கருணையைப் பெறலாம் என்பதே!
அந்த நோக்கத்தை அவரவர் அவரவர் மதங்களிலேயே இருந்தால் எப்படி நிறைவேற்ற முடியும்?
அப்படியானால் ஒவ்வொரு மதமும் தனது சிறப்புகளைச் சொல்வதன்மூலமும் மக்களுக்கான நல்ல புதுப்புது நெறிகளையும் கோட்பாடுகளையும் உருவாக்குவதன்மூலம் பிற மதங்களின் செல்வாக்கின்கீழ் உள்ளவர்களைத் தன்கீழ் வரச் செய்தால்தானே முடியும்?
இது அனைத்து மதங்களின் பொதுத் தேவையாக இருக்கும்போது ஏன் எந்த மதமும் மத மாற்றத்தை விரும்புவது இல்லை?
தன்னிடம் வரும் பிற மதத்தவர்களை விரும்பும் அதே நேரம் தன்கீழ் வாழும் எவரும் பிற மதங்களுக்குச் செல்ல ஏன் எந்த மதமும் அனுமதிப்பது இல்லை?
No comments:
Post a Comment