உண்ணும் முன்னே.....
நண்பர்களே!
நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் தான் உண்ண நினைத்திருக்கும் உணவு சுத்தமானதா, அதை உண்ணவேண்டிய தேவையுடன் நாம் இருக்கிறோமா, அந்த உணவு தீங்கு விளைவிக்காத நல்லுணவா சுவையான உணவா என்று மட்டும் யோசித்து உண்டால் போதுமானது!
நோயாளிகளாக இருந்தால் அந்த உணவு தான் இருக்கும் நிலைக்குப் பொருத்தமானதும் அவசியமானதும்தானா என்று யோசித்து உண்டால் போதும்
ஆனால் பலருடைய உணவு சம்பந்தமான ஆலோசனைகள் உணவுப் பொருள்சத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி மாணவர்களுக்கானது போல் உள்ளது!
அப்படி உணவுப் பண்டங்களில் அடங்கியுள்ள அனைத்து சத்துக்களையும் நினைவில் கொண்டு பார்த்துப் பார்த்து உண்ண நினைப்பது தேவையற்றது.
அது ஒருவிதத்தில் உடல் நலனுக்குத் தீங்கானதும் ஆகும்.
No comments:
Post a Comment