நாணையம்!
தங்களுக்கு ஆதாயம் இல்லாவிட்டால்......
நாணையமாவது மண்ணாங்கட்டியாவது!...
இதுதான் இந்த உலகம்!....
============================================================
சுடராய் எரிவோம்
============================================================
சுடராய் எரிவோம்
நண்பர்களே!
ஒரு தீபம் எரியும்போது அடிப்படையாக இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப் படுகிறது!
ஒன்று அதற்குத் தேவையான எரிபொருள் வேண்டுமளவு கிடைக்கவேண்டும்.
இரண்டாவதாக எறிந்து முடிந்த கழிவுகள் உடனுக்குடன் சுத்தமாக வெளியேற்றப்பட வேண்டும்!
எரிபொருள் போதுமான அளவு கிடைக்காவிட்டாலோ கழிவுப் பொருள் சுத்தமாக வெளியேற்றப் படாவிட்டாலோ தீபத்தின் சுடர் தடுமாறும்.
பலவீனமடையும்.
கடைசியில் அணைந்து போகும்!
இது நாம் கண்கூடாகப் பார்க்கும் உண்மை!
நமது உடல் வாழ்வும் அத்தகையதே!
அது நன்றாக சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான எரிபொருளாகிய உணவும் காற்றும் நீரும் சரியான தரத்தில் சரியான அளவில் கொடுக்க வேண்டும்.
அதே போல பயன்பாடு முடிந்த கழிவுகள் உடனடியாகக் கால தாமதம் இன்றி வெளியேற்றப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் இந்தத் தீபமும் சுடர்விட்டு எரியாது!
தட்டுத் தடுமாறி விரைவில் அணைந்து விடும்!
இந்த உண்மையைக் காண ஏன் மறுக்கிறோம்?......
No comments:
Post a Comment