ஆன்மிகத்தில் இரண்டு நிலைகள்.....
ஆன்மிகத்தில் இரண்டு நிலைகள் உலகெங்கிலும் இருக்கின்றன..
ஒன்று துவக்க நிலை.
இரண்டாவது பண்பட்ட நிலை!
துவக்க நிலையில் மூட நம்பிக்கைகள் அதிகமாகக் கலந்து இருக்கும்.
இரண்டாவது நிலையில் தத்துவார்த்த சிந்தனைகளும் ஆழ்ந்த அறிவாற்றலும் வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டமும் வெளிப்படும்.
துவக்க நிலையில் இருக்கும் எண்ணற்ற மக்களை இரண்டாவது நிலைக்கு உயர்த்துவதுதான் மிகச் சிறந்த ஆன்மிகப் பணி ஆகும்!
ஆனால் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யாமல் அவர்களின் அறியாமையை மேலும் மேலும் வளர்க்கும் விதமாக செய்யப் படும் செயல்களே ஆன்மிகப் பணியாகச் செய்யப்ப்படும் போக்குதான் உலகெங்கிலும் நிலவுகிறது.
அதை வாழும் வழியாகக் கொண்டு எண்ணற்றவர்கள் வாழும் அளவுக்கு உண்மையான ஆண்மிகப்பணியாகச் செய்பவர்களைக் காண்பது கடினம்.
அதனால் இரண்டாம் நிலை என்பது தத்துவார்த்த விவாதப் பொருளாக மட்டும் இருக்கிறதே தவிர வளரும் ஆன்மிகமாக இல்லை!
அதனால் ஆன்மிகம் என்ற பெயரால் மூட நம்பிக்கைகள்தான் உலகெங்கிலும் தலைவிரித்து ஆடுகிறது.
அதன்காரணமாக உண்மையான ஆன்மிக சிந்தனைகளை உடைய உண்மையான ஆன்மிகவாதிகள் என்ன செய்வது என்று வழி தெரியாமல் விழி பிதுங்க வேண்டி உள்ளது!....
No comments:
Post a Comment