எனது ஆன்மிகம்!
என்னைப் பொருத்தவரை மூட நம்பிக்கைகள் அற்ற ஆன்மிகத்தைத்தான் பின்பற்றுகிறேன்!
அதில் மதங்கள் இல்லை.
கடவுள் வடிவங்கள் இல்லை.
சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை.
வழிபாட்டுத் தலங்கள் இல்லை!
மன மாச்சர்யங்கள் இல்லை!
காரணம் இறைவன் வேறு நான்(மனிதன்) வேறு என்று பார்ப்பது இல்லை!
நாம் காணும் மற்றும் காணவும் உணரவும் முடியாத அத்தனையுமாக இருப்பது பரம்பொருள் அல்லது இறைவன்.
நாம் அதில் ஒரு சிறு அங்கமே!
அதில் நம்முடைய பாத்திரத்தையும் பிறவற்றின் பாத்திரத்தையும் உணர்ந்து நமது பாத்திரத்தைச் சிறப்பாக்குவதே ஆன்மிகம்!
அதன்படி பரம்பொருளில் நம்மையும் நம்மில் பரம்பொருளையும் பார்க்கவேண்டும்!
ஒவ்வொருவரும் அனைவரின் நலனை விரும்ப வேண்டும்!
அனைவரும் ஒவ்வொருவர் நலனினும் அக்கரை கொள்ள வேண்டும்!
இந்த உரைகல்லை வைத்துத்தான் நான் ஆன்மிகம் என்பதைக் காண்கிறேன்!
No comments:
Post a Comment