ஒரு கேள்வி!
இந்த மாபெரும் அண்டத்தில் எல்லையற்ற பல மாபெரும் சங்கதிகள் அடங்கியுள்ளன.
அளவிட முடியாத அண்டம்,
அதில் பேறு வெடிப்பின்மூலம் வெடித்துச் சிதறுவதும் பின் ஒரு காலத்தில் சுருங்கிக் காணாமல் போவதுமான அடி முடி தெரியாத பிரபஞ்சங்கள்,
அதற்குள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே உருவாவதும் மறைவதுமாக இருக்கும் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்கள்,
நட்சத்திரக் கூட்டங்களில் அடங்கியுள்ள பல்வேறு வகையிலான நட்சத்திரங்கள், கருந்துளைகள், வாழ்வு முடிந்துபோன நட்சத்திரங்கள், செம்பூதங்கள், வெள்ளைக் குள்ளர்கள், பல்சார்கள், நியூட்ரான் விண்மீன்கள்,
வின்மீன்களைச் சுற்றிக்கொண்டிருக்கும் உயிரினங்கள் வாழ்கின்ற மற்றும் வாழாத எண்ணற்ற கோள்கள், துணைக்கோள்கள்,.....
ஆம்!...இதற்குள்ளே கண்காணாத ஒரு இடத்தில் நமது சூரிய மண்டலமும் பூமியும்....
அதில் வாழும் கோடானுகோடி உயிரினங்களில் ஒன்றான மனித இனம்....
கேள்வி என்ன வென்றால் எல்லையே இல்லாத இந்த அண்டமும் அதில் உள்ள அத்தனையும் இப்படித்தான் தோன்றியது இங்குதான் தோன்றியது , இன்னார்தான் தோற்றுவித்தார் அல்லது தோற்றுவிக்கப் பட்டது என்று நேற்று முளைத்த மனிதன் அடித்துச் சொல்கிறானே .....
அது எப்படி?
No comments:
Post a Comment