தண்ணீர் மாத்திரை!
நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்து கொடுக்கும்போது சாப்பாட்டுக்கு முன்னால் இன்ன மருந்தை இன்ன அளவு சாப்பிட வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னால் இன்ன மருந்தை இன்ன அளவு சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள்.
அது மிகவும் சரியானதே!
காரணம் சில மருந்துகளைக் காலி வயிற்றில் உண்பது நல்லது. சில மருந்துகளை வயிற்றில் உணவு இருக்கும்போது உண்பது நல்லது. அவற்றின் குணம் அப்படி!
ஆனால் சமீப காலங்களில் தண்ணீரையும் சாப்பாட்டுக்கு இவ்வளவு நேரத்துக்கு முன்னால் தான் குடிக்கணும். சாப்பாட்டுக்கு இவ்வளவு நேரத்துக்குப் பின்னால்தான் குடிக்கணும் என்று சொல்கிறார்கள்.
எதனால் அப்படி?
மருந்து மாத்திரைகளைக்கூட முன்னால் அல்லது பின்னால் என்று ஒரு மருந்துக்கு ஒரு நிபந்தனை மட்டுமே விதிக்கிறார்கள்.
அதுவும் நோயாளிகளுக்கு!
ஆனால் நல்ல நிலையில் வாழும் ஒருவருக்குத் தண்ணீரை சாப்பாட்டுக்கு முன்னால் அல்லது பின்னால் இவ்வளவு நேரம் கழித்து அருந்தச் சொல்வது எதற்காக?
மருந்து மாத்திரைகளைவிடத் தண்ணீரில் பக்க விளைவுகள் அதிகமோ?....
இந்த இடத்தில்தான் நாம் ஒன்றை யோசிக்க வேண்டும்.
ஆதாவது தண்ணீர் என்பது குறிப்பிட்ட நேரம் பார்த்துச் சாப்பிடுவதற்கு மாத்திரைகள் அல்ல!
தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தவறா?
தாகம் எடுக்கும் நிலையில் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது எப்படி அறிவுபூர்வமான ஒன்று ஆகும்?
இந்த இடத்தில்தான் ஒன்றைக் காணத் தவறுகிறார்கள்.
ஆதாவது சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்றால் அப்போது தண்ணீர்த்தாகமும் இருக்கக் கூடாது.
ஆனால் தாகம் எடுக்கிறது தண்ணீரும் குடிக்கிறோம்.
தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதும் தவறு.
தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் தவறு!
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்.
ஒரே வழிதான் உள்ளது!
ஆதாவது உண்ணும்போது தாகம் எடுக்கக் கூடாது!
அதற்கு என்ன செய்வது?
வேறு என்ன? தாகம் எடுக்காத உணவுப் பண்டங்களை உண்ண வேண்டும்!
ஆதாவது முடிந்தவரை இயற்கை உணவு வகைகளை உண்ண வேண்டும்!
அதைச் சொல்லாமல் தாகத்தை உருவாக்கும் ஆதாவது தண்ணீர் நிறையத் தேவைப்படும் செயற்கைப் பண்டங்களை உள்ளே திணித்துக்கொண்டே தண்ணீர் குடிக்கவேண்டாம் என்று சொல்வது கொதிக்கும் நீரில் தண்ணீரை ஊற்றாமல் அப்படியே குளியுங்கள் என்று சொல்வதற்குச் சமம்!
அது எப்படிச் சரி?

உண்ணும்போது தாகம் எடுக்கக் கூடாது!
ReplyDeleteதாகம் எடுக்காத உணவுப் பண்டங்களை உண்ண வேண்டும்
முடிந்தவரை இயற்கை உணவு வகைகளை உண்ண வேண்டும்!
அதைச் சொல்லாமல் தாகத்தை உருவாக்கும் ஆதாவது தண்ணீர் நிறையத் தேவைப்படும் செயற்கைப் பண்டங்களை உள்ளே திணித்துக்கொண்டே தண்ணீர் குடிக்கவேண்டாம் என்று சொல்வது கொதிக்கும் நீரில் தண்ணீரை ஊற்றாமல் அப்படியே குளியுங்கள் என்று சொல்வதற்குச் சமம்!
அது எப்படிச் சரி?
மிகவும் சரியானதே..ங்
நன்றி நண்பரே!
Delete