பேனும் பெத்த பெருமாளும்.....
நண்பர்களே!
வழியைப் பார்த்து நடக்கணும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்!
அதன்பொருள் என்ன?
நாம் நடக்கும் பாதையில் கல்லும் முள்ளும் குழியும் குண்டுகளும் இருக்கிறதா என்று பார்த்து நடக்கணும் என்று பொருள்!
காரணம் அப்படிப் பார்த்து நடக்காவிட்டால் கால் இடறியும் கல், முள் பட்டும் காயம் ஏற்படலாம்!
ஆனால் அதற்காக வழியைப் பார்த்து நடக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு அடிக்கும் வழியை உற்றுப் பார்த்துப் பார்த்து அதில் குப்பை இருக்கிறது, சிறு சிறு கற்கள் இருக்கிறது,, நுண்ணுயிர்கள் இருக்கிறது, அதை மிதித்தால் நோய்த் தொற்று வரும், வேறு தொல்லை வரும் என்றெல்லாம் ஒரு காலைத் தூக்கி வைத்துக்கொண்டு எங்கே வைப்பது என்று ஆராயந்துகொண்டு இருக்க முடியாது!
சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் கால்கள் சமாளிக்கும்!
சற்றுப் பெரியதையும் பழக்கத்தால் இயல்பாகவே நினைத்துப் பார்க்காமலே சமாளித்து நடப்போம்.
அது போல ......
உண்ணும் உணவைப் பார்த்து உண்பது மிகவும் நல்லதே!
ஆனால் எதைப் பார்க்கவேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கவேண்டும்!
ஆதாவது உடல் நலத்துக்கு ஏற்றதா? கெடாமல் இருக்கிறதா? சுவையாக இருக்கிறதா? சுத்தமாக இருக்கிறதா? இயற்கைத் தன்மை பாழ்படாமல் இருக்கிறதா? என்பது போன்ற அடிப்படையான சிலவற்றைப் பாத்தால் போதும்!
மற்றதை நமது உடம்பே பார்த்துக்கொள்ளும்!
நோய் வந்தால் அப்போது ஆராய்ந்து தகுந்த உணவை மாற்றி உண்டால் போதும்!
அதைவிட்டுவிட்டு நாம் உண்ணும் ஒவ்வொன்றிலும் என்னென்ன சத்துக்கள் எந்த விகிதத்தில் உள்ளன, எதில் சூடு அதிகம், எதில் குளிர்ச்சி அதிகம், எதில் வாதம் பித்தம் கபம் அதிகம் உள்ளது , ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நேரத்துக்கும் எந்த விகிதத்தில் உண்ணவேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டுச் சிபாரிசு செய்கிறார்கள்!
இது கிருஷ்ணதேவராயரின் அரண்மனைக்கு வந்த பண்டிதர்கள் சமையல் செய்யப்போய் அனைத்தையும் கெடுத்துப் பட்டினி கிடந்த கதைபோல் இருக்கிறது!
அதனால் ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கும் பண்டிதர்களின் யோசனைகளைக் கண்டுகொள்ளாமல் உடலும் உணர்வும் அறிவும் அனுபவமும் என்ன சொல்கிறதோ அப்படி அப்படி உண்டு வாழ்வதே சரியான முறை!
பசிஎடுக்குமளவு உழைப்போம்!
தேவையானதைத் தேவையான அளவு உண்போம்!
நலமாக வாழ்வோம்!
அவ்வளவே!...
No comments:
Post a Comment