இறைவனுக்கு இது பிடிக்குமா?
எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டே சில இடங்களில்தான் கடவுள் இருப்பதாக நம்புவதும் நம்பவைப்பதும் அந்த இடங்களை நாசமாக்குவதும் அறிவாற்றல்மிக்க செயல்களாக இருக்க முடியாது! .
அதனால் இன்று புகழ்பெற்ற கோவில்கள் இருக்குமிடங்களெல்லாம் உண்மையில் குப்பைத் தொட்டிகள் ஆகிவிட்டன.
கடவுளின் பெயராலும் பக்தியின் பெயராலும், இயற்கைக்கு எதிரான பெரும் தாக்குதலே நடந்துகொண்டு இருக்கிறது!...
ஒருவனுக்கு உண்மையாகவே இறை பக்தி இருக்குமாயின் சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்வதன்மூலம் தனது உள்ளத்தை இறைவன் குடிகொள்ளும் கோவிலாக மாற்றவேண்டும்!
அதைவிட்டு இப்போது நடப்பது தொடர்ந்தால் பூமியை நாசப் படுத்துவதில் இறைவழிபாடு முதலிடத்தை எட்டி விடும்!.....
அது இறைவனுக்குப் பிடித்ததாக இருக்க முடியாது!
எதிரான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்!
இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்!....
No comments:
Post a Comment