குற்றவாளிகள்.....
நண்பர்களே!
மக்களுக்கும் அவர்களை வழிநடத்தி நெறிப்படுத்தும் சட்டங்களுக்கும் சம்பந்தம் பெரும்பாலும் இருப்பதில்லை.
ஆதாவது மக்கள் தங்களை ஆளும் சட்டங்களைப் பற்றி ஓரளவு அறிந்திருக்க வேண்டும்.
அந்த அளவு பொது அறிவு இல்லாத மக்களாக இருக்கும் பட்சத்தில் அந்த சட்டங்களைக் கையாள்வோர் பாரபட்சமில்லாத நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்.
இங்கு அப்படிப்பட்ட இரண்டும் இல்லை.
அதனால் சட்டமாவது விட்டமாவது அவனவனுக்கு முடிந்த அளவு சட்டத்தைக் கடித்துக் குதற விட்டிருக்கிறார்கள்.
நூறுக்கும் ஆயிரத்துக்கும் சட்டத்தைக் குதறுபவர்கள் சாதாரண மக்களாக இருக்க லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் குதறுபவர்கள் மக்களின் மேய்ய்ப்பர்களாக இருக்கிறார்கள்!....
சுருக்கமாகச் சொன்னால் சமூகமே சிறியதும் பெரியதுமான குற்றவாளிகளாக!....
No comments:
Post a Comment