சொரக்கா சொரக்கா .......
ஒரு ஊர்ல ஒரு அப்பாவி இருந்தானாம்....
பொண்டாட்டி எதைச் சொன்னாலும் தட்ட மாட்டானாம்!
பெண்டாட்டிக்கு சுரைக்காய் மேல் ரொம்ப ஆசையாம்!..
அண்ணாடும் புருஷன்காரன நச்சிட்டே இருந்தாளாம்!
அப்போ எல்லாம் இப்படி காய்கறி மார்கெட் கெடையாது!
ஒண்ணா தன்னோட பொடக்காளில வெத போட்டுக் காய்க்கணும்.
இல்லன்னா யாராவது தெரிஞ்சவங்க குடுக்கணும்.
அவனுக்கு ரெண்டும் இல்லே!
என்ன செய்யுறது!...
சரி , இந்தத் தொல்லை பொறுக்குறதைவிட ராத்திரில எங்காச்சும் போய்ப் பாக்கலாம்னு முடுவு பண்ணுனான்.
அதே மாதிரி ராத்திரி சாமத்துல எந்திரிச்சு பகல்லயே பாத்துவச்சிருந்த ஒரு தோட்டத்துக்குப் போனானாம்.
அங்கெ சொரக்கா நெறைய இருந்ததாலே இவனும் வேணுங்குறஅளவு புடுங்கி மூட்டை கட்டிட்டான்...
தூக்க முடியலே!....
என்னடா வம்பாப் போச்சு அப்படின்னு ஆன வரைக்கும் பாத்தானாம்.
அப்பவும் முடியலே!
அத்து அவசரத்துக்கு என்ன பண்ணுறதுன்னு சொல்லி மசத்தனமா அங்கெ பட்டில படுத்திருந்த காட்டுக்காறன எழுப்பித் தூக்கி விடச் சொன்னானாம்.
அவன் விருக்குன்னு எந்திரிச்சவன் திருடன்னு நெனைச்சு இவன்இடுப்புல கத்தி இருக்கும்னு பயந்து சரி வா தூக்கி உடுரன்னு கோளாறாச்சொல்லி மூட்டையைத் தூக்கி விட்டானாம்.
இவனும் மூட்டைய ரெண்டுகையில புடிச்சுத் தலைக்குத் தூக்கிப் புடிச்சுகிட்டானாம்.
அந்த சமயம் பாத்துக் காட்டுக்காரன் தங்கிட்ட இருந்த சூறிக் கத்திய எடுத்து இவன் மூக்க வெறுக்குன்னு அறுத்துட்டானாம்!
வலி பொறுக்க மாட்டாம ஐயோ அப்பான்னு கத்திக்கிட்டே மூட்டையைப் போட்டுட்டு வீட்டுக்கு ஓடுனானாம்.!...
கதவத் தட்டுனதும் ஆசையா சொரக்காயை எதிர்பாத்துக்கிட்டிருந்த அவன் பொண்டாட்டி கதவைத் தெறந்தாளாம்!
அவளப் பாத்து , " சொரக்கா சொரக்கான்னு கேட்டியேடி சொணைகெட்ட மூளி! பருத்துடி வெளக்கெ! பாருடி மூக்கெ! அப்படின்னானாம்!.....
என்ன கேட்டு என்ன பண்ணுறது! போன மூக்கு போயே போச்சு!.....
No comments:
Post a Comment