உண்ணும் முன்னே!...
நண்பர்களே!
நாம் சாப்பிடும் அளவை நாக்கும் உணர்வும் தீர்மானிக்கக் கூடாது!
நமது அறிவுதான் தீர்மானிக்கவேண்டும்!
ஆதாவது சாப்பிட உண்ணும்போது அந்த நேரம் எந்த உணவை எவ்வளவு சாப்பிட்டால் போதும் என்று அறிவு சொல்கிறதோ அவ்வளவு மட்டும் உண்ணவேண்டும்!
அதற்கு ஒரே வழி உண்பதற்கு அமரும் முன்பாகவே தேவையானதை அறிவு சொல்லும் அளவு ஒரே முறை எடுத்து வைத்துக்கொண்டு உண்டுவிட்டு எழ வேண்டும்.
ருசியாக இருக்கிறது, பசி ஆறவில்லை என்று சொல்லி எந்தக் காரணத்தை முன்னிட்டும் மீண்டும் கூடுதலாக உண்ணக கூடாது!
இப்படிச் செய்தால் நோய்களும் அண்டாது! உடல் எடையும் அதிகரிக்காது!....
செய்வோமா?....
No comments:
Post a Comment