இதுதாண்டா சோதிடம்....
நான் சோதிடத்தை ஏற்றுக்கொள்வது இல்லை. நம்புவதும் இல்லை!
மாறாக முடிந்தவரை மற்றவர்களையும் நம்பவேண்டாம், ஏமாற வேண்டாம் என்று சொல்லி வருகிறேன்...
சமீபத்தில் ஒரு நண்பர் மதுரையில் ஒரு சோதிடர் இருக்கிறார். அவரிடம் உங்களை அழைத்துச் சென்று மெய்ப்பிக்கிறேன் என்றார்.
இதற்காக அவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமா? இப்படி ஒவ்வொருவருக்கும் மெய்ப்பிப்பதற்காக நூற்றுக்கணக்கான கி மீ நான் பயணம் செய்துகொண்டிருப்பது எப்படி சாத்தியம்? உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்! எதைவைத்து நம்புகிறீர்கள் என்றேன்.
அதற்கு அவர்,நான் சொல்வதை நீங்கள் நம்புவதாக இருந்தால் இப்போதே மெய்ப்பிக்கிறேன் என்றார்!
நம்புகிறேன், சொல்லுங்கள் , அதே சமையம் அதற்கான எனது கருத்தையும் நீங்கள் தெளிவு படுத்தியாகவேண்டும் . தயாரா என்றேன். அவரும் தயார் என்றார்!
அவர் : நான் மதுரை சோதிடரிடம் எனது மகனின் ஜாதகத்தைக் கொடுத்து அதன் கிரக நிலையைச் சொல்லுங்கள் என்று மட்டும்தான் கேட்டேன். வேறொன்றும் சொல்லவில்லை.
நான் : சரி! சொல்லுங்கள்!
அவர் : அவர் ஜாதகத்தை மூடிவைத்துவிட்டு உங்கள் மகன் இதற்குள் கலப்புத் திருமணம் செய்திருக்கணும், அப்படிச் செய்யாமல் இருந்தால் இனி அப்படித்தான் செய்வார் அப்படின்னார்! எங்கள் மகன் கலப்புத் திருமணம் செய்ததுதான் உங்களுக்குத் தெரியுமே!....
நான் : அதனாலென்ன? கலப்புத் திருமணம் செய்யக் கூடாதா?
அவர் : அப்படியானால் சோதிடன் சொன்னதை உண்மை என்று ஏற்றுக்கொண்டீர்களா?
நான் : அதெப்படி? சோதிடம் உண்மையா பொய்யா என்பதை இதை வைத்து மட்டும் முடிவு செய்வது எப்படிச் சரியாகும்? எங்காவது ஒரு விவாதம் ஏற்பட்டால் எனது நண்பரின் மகன் கலப்புமணம் செய்ததை ஒரு சோதிடர் சொல்லிவிட்டார் . அதனால் நீங்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் சொல்ல முடியுமா? அதை நிரூபிப்பதற்கான சான்றாக நீங்கள் சொன்னதை தவறு என்று நாம் இன்னும் இரண்டு நிமிடங்களில் நிரூபிக்கிறேன் . நீங்கள் சோதிடம் பொய் என்பதை ஏற்றுக்கொள்வீகள் அல்லவா?.....
அவர் : நிச்சயம் உங்களால் முடியாது!
நான் : முடியுமா முடியாதா என்பதை இப்போது பார்த்து விடுவோம்......ஆதாவது கலப்பு மணம் செய்தவர்கள், கலப்பு மணம் செய்யாதவர்கள், இரண்டு வகையிலுமாகப் பத்து ஜாதகங்களை அவரிடம் கொடுத்தால் அவர் அதைச் சரியாக வகைப்படுத்திப் பிரித்துச் சொல்வாரா?...
அவர் : அது...அதுவந்து....
நான் : வந்தாவது போயாவது! சோதிடம் பொய் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லை மதுரை போலாமா?...ஆனால் ஒன்று பத்தாயிரம் ரூபாய் பந்தயம்......
அவர் மூச்சே வாங்கவில்லை.....
நான் : இனிமேல் இப்படிப்பட்ட இத்துப்போன வாதங்களைஎல்லாம் குப்பையில்வீசிவிட்டு எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லா மனிதர்முன்னும் மெய்ப்பிக்கவல்ல ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். இப்போது நான் உங்ளை வீழ்த்திய பதில் அத்தகையது! சரியா?
அவர் : .............(மவுனம்)
No comments:
Post a Comment