ss

Wednesday, November 19, 2014

உணவே மருந்து ( 95 )

உணவும் மதுவும்.....

ஒரு பாட்டில் பிராந்தி உற்பத்திக்கு இரண்டரை கிலோ ஆப்பிள் தேவையாம்.

அத்தோடு இன்னும் ஒரு இரண்டரை கிலோ அளவுக்கு உற்பத்தி செலவும் ஆகலாம்!....

கேள்வி என்னவென்றால் ஒரு பாட்டில் பிராந்தியில் இரண்டரை கிலோ ஆப்பிளில் உள்ள சத்துக்கள் நிரம்பியுள்ளனவா? 

இரண்டரை கிலோ ஆப்பிளைப் பயனற்றதாக்குவதற்கு மேலும் இரண்டரை கிலோவைப் பயனற்றதாக்குகிறோம்! ஆதாவது ஐந்து கிலோ!  

இது எந்தவகையில் நியாயம்? 

இதுபோலவே இன்னும் பல மதுவகைகள் தயாரிப்பதற்கு கோடிக்கணக்கான டன் உணவுத் தானியங்களும் பழ வகைகளும் வீணடிக்கப் படுகின்றன!

அதற்காக இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளும் கணக்கு வழக்கின்றி நடக்கின்றன.  

மாமிச உற்பத்திக்காக செலவு செய்யப்படும் தானியங்களைப் பார்த்தால் மாமிசத்தின்மூலம் கிடைக்கும் சத்துக்களைவிட அதற்காகச் செலவிடப்படும் தானியங்களின் சத்துக்களும் பயன்களும் மிக அதிகம் ஆகும்!  

உலகில் உற்பதிசெய்யப் படும் பழங்களும் தானியங்களும் நேரடியான உணவுத்தேவைக்காக மட்டும் பயன்படுத்துவது உண்மை என்றால் உலகில் உணவின்றி ஒருவரும் பட்டினி கிடக்கத் தேவை இருக்காது என்பதே உண்மை! 

உணரப்ப்படுமா?....


No comments:

Post a Comment