ss

Friday, November 28, 2014

உணவே மருந்து ( 96 )

 துணி சொல்லும் தத்துவம்!

நண்பர்களே! 
இந்தப் படத்தில் ஒரே துண்டுத் துணி இரண்டு விதமாகத் தெரிகிறது. 

முதலாவது ஈரமும் சேறும் சகதியும் அப்பி இருக்கிறது.

இரண்டாவது தனியாகத் துணி மட்டும் இருக்கிறது.

இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று ஆராய்ந்தால் அதன் முடிவில் அருமையான ஒரு செய்தி கிடைக்கும். 

ஆதாவது முதல்துணி துணியாக இருந்தாலும் அதில் தேவையற்ற சேறும் சகதியும் படிந்திருப்பதால் தேவையற்ற முறையில் மிகவும் கனமாக இருக்கிறது. 

அழுக்காக இருக்கிறது.

பயன்படுத்துவதற்கு பல வழிகளிலும் இடையூறாக இருக்கிறது. 

முடிவில் அந்தத் துணியின் தேவை எதுவோ அந்தத் தேவைக்கு முழுமையாகப் பயன்படாமல் வீணாகத் தூக்கி எறியப்படுகிறது! 

ஆனால் இரண்டாவது துணி அப்படி அல்ல! 

அது சுத்தமாக இருக்கிறது.

எளிதாகப் பயன்படுத்தும் நிலையில் இருக்கிறது.

கனமில்லாமல் கரடுமுரடாக இல்லாமல் அழகாகவும் இருக்கிறது.

அதனால் அது எதற்காக உருவானதோ அந்தப் பயனை முழுமையாகக் கடைசிவரை நிறைவேற்றுகிறது.

கந்தலாகும்வரை மதிப்புக்குரியதாகத் திகழ்கிறது! 

எதற்காக இந்தக் கதை?



இதை வேறொரு கண்ணோட்டத்திலும் பார்ப்போம்! 

நமது மனித உடம்பும் இதுமாதிரி இரண்டு நிலைகளை உடையதாகவே விளங்குகின்றது. 

ஒரு பகுதியினர் இரண்டாவது துணியைப்போல ஆதாவது நல்ல சுத்தமான துணியைப் போல எடை குறைவாக இருக்கிறார்கள்.

மிக்க பயனுடன் சிறப்பான உடல்வாழ்க்கை வாழ எளிதாக இருக்கிறது. 

ஆனால் இன்னொரு பகுதியினர் பல்வேறு காரணங்களால் தங்கள் உடல் எடையைத் தேவைக்கு அதிகமாக வளர்த்துக்கொண்டு அவதிப் படுகிறார்கள். 

அதனால் எந்த மாதிரிவாழ்வு வாழ்வதற்காக உலகில் பிறந்து வளர்ந்து வாழ்கிறோமா அந்த மாதிரி வாழ விருப்பம் இருந்தாலும் முடிவது இல்லை! 

முடிவாகத் தேவையில்லாத பல உடல் உபாதைகளுக்கும் துன்பங்களுக்கும் இலக்காகி ஆனந்தமான வாழ்க்கை வாழ்க்கை வாழ்வதற்காகப் பிறந்தாலும் அற்ப வாழ்வு வாழ்ந்து மறைகிறார்கள். 

அந்த நிலையில் அவர்கள்  துன்பப் படுவதுமட்டுமல்ல, அவர்களைச்  சார்ந்தவர்களும் துன்பப் படுவார்கள்.

அவர்களின்  அறிவாற்றலை நேசிப்பவர்கள்கூட உடல் தகுதியை நேசிக்க முடியாது. 

அழகற்ற மாமிசத்தால் ஆன ஒரு உருவத்தை யார்தான் விரும்ப முடியும்?... 

அதனால் வாழ்வே உடலாலும் உள்ளத்தாலும் நரகமாக மாறிவிடுகிறது!

இந்த நிலை கூடாது என்றால் நமது உடல் தகுதியை முதல் துணியைப்போல அல்லாமல் இரண்டாவது துணியின் நிலையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். 

முதல் துணியில் படிந்திருக்கும் அழுக்கையும் சேற்றையும் அடித்துத் துவைத்துக் கழுவிச் சுத்தம் செய்தால் தகுதியுள்ள நல்ல துணியாக மாறும் என்பது போல நமது உடம்பில் அழுக்குகளாகவும் தேவையற்ற சுமைகளாகவும் படிந்துவிட்ட கூடுதல் எடையைக் கடினமான முயற்சிகளாலும் கட்டுப்பாட்டாலும் துடைத்தெறிந்து வாழத் தகுதியுள்ள உடம்பாக மாற்ற வேண்டும். 

குப்பை உணவுகளால் வளர்த்த உடம்பை உழைப்பாலும் பயிற்சியாலும் உணவுக் கட்டுப்பாட்டாலும் பல்வேறு விரதங்களைக் கடைப்பிடிப்பதாலும் கரைத்து நல்ல உடம்பாக மாற்ற வேண்டும். 

கடைசியில் சரியான உணவாலும் குறிப்பாக இயற்கை உணவாலும் உடலுழைப்பாலும் பாதுகாக்கப்படும் நல்ல உடம்பு மட்டுமே எஞ்சி இருக்க வேண்டும். 

அதுதான் நல்ல உடம்பு! 

அதுதான் வாழத் தகுதியுள்ள உடம்பு! 

அதுதான் காண்பவரைக் கவரக்கூடிய உடம்பு! 

அதுதான் ஒருவருடைய மதிப்பையும் மரியாதையையும் சரியாகப் படம்பிடித்துக் காட்டும் வைரம் பாய்ந்த உடம்பு! 

அதுதான் ஒருவரையொருவர் நேசிப்பதர்கான தகுதியுள்ள சரியான உடம்பு!

உடலளவில் நமது வருங்கால லட்சியம் என்ன?

முதல் துணியா? இரண்டாவது துணியா?


No comments:

Post a Comment