தொங்கட்டும் அஹிம்சை!
ஐயா!
உங்கள் அஹிம்சையைப் பின்பற்றும் யாராவது ஒருவர் இருக்கிறாரா என்று தேடித் தேடிப் பார்க்கிறோம்.
உங்களைப்போல் கோவணம் கட்டிய தலைவர் யாராவது இருக்கிறார்களா என்று தேடித் தேடிப் பார்க்கிறோம்.
உங்களைப்போல் ராட்டை சுற்றும் தலைவர் யாராவது இருக்கிறார்களா என்றும் தேடித் தேடித் பார்க்கிறோம்.
ஒற்றை ஆள் கிடைக்கவில்லை!
ஆனால் அவ்வப்போது குரங்குகளைப் போல் சிலர் குல்லா அணிந்துகொண்டு திரிவதை மட்டும் பார்க்கிறோம்.
உங்கள் அஹிம்சையின் மறைவில் மக்களை அக்கிரமங்களுக்கு அடிபணியும் கோழைகளாக்கி எண்ணற்றவர்கள் தாங்கள் மட்டும் ஆயுதபாணிகளாகவும் குபேரர்களாகவும் ஆகிவிட்டார்கள்!
பகத் சிங்கைத் தூக்கிலிட்டதற்குப் பதிலாகத் தர்மத்துக்கு எதிரான உங்கள் அஹிம்சையைத் தூக்கில் தொங்கவிட்டிருந்தால் நாட்டில் இன்று எண்ணற்ற விவசாயிகள் தூக்கில் தொங்க நேர்ந்திருக்காது!...
லஞ்சம் ஆட்சிக்கட்டில்களை நிரந்தரமாகக் கைப்பற்றியிருக்க முடியாது!
தர்மம் நிரந்தரமாகத் தலைகுனியும் நிலையும் ஏற்பட்டிருக்காது!
ஆனாலும் என்ன, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஹிம்சாமூர்த்தியான உங்கள் ஜெயந்தியைக் கொண்டாடியே தீருவோம்.
காரணம் ஒருநாள் லீவு கிடைக்கும்.....

No comments:
Post a Comment