ss

Saturday, January 30, 2016

எனது மொழி ( 204)

யார் பொறுப்பு?

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குப் பின்னால் PETA வை தமிழ்நாட்டு விவசாயத்துக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் எதிரான அநியாயமான ஒரு அமைப்பாகச் சித்தரித்து விமர்சனம் செய்யப்படுகிறது.
நமது பாரம்பரிய கால்நடைகளை ஒழித்துவிட்டு அந்நியர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதற்கு ஆதாரமாக பதினைந்து நாட்கள் அவகாசத்தில் அதன் பொறுப்பில் வரும் விலங்குகள் கொல்லப்படும் கொடூரத்தைச் செய்வதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது...
அப்படியானால் PETA போன்ற ஒரு அமைப்பு நமக்குத் தேவை இல்லையா?
அதன் சேவையாகச் சொல்லப்படும் சேவைகளைச் செய்வதற்கு வேறு நம்பகமான பிராணிகள் நல அமைப்பு இல்லையா?
அரசுப் பொறுப்பில் அப்படிப்பட்ட அமைப்பு இல்லையா?
அல்லது பிராணிகள்பால் கருணை காட்டக்கூடிய அமைப்புகளே தேவையே இல்லையா?
ஜல்லிக்கட்டு நின்று போனதற்கு PETA காரணமா?
நமது அரசுகளும் சட்டங்களும் காரணமா?
யார் முக்கியப் பொறுப்பு?


Wednesday, January 27, 2016

அரசியல் (76)

கூட்டணி..

கூட்டணிக் கட்சிகள்  மேல் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமானால் நேர்மையான நடைமுறை சாத்தியமான பொதுக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களையும் முன்வைக்கவேண்டும்.

வெற்றிக்குப் பின் குழப்பங்கள் வராது என்பதற்கான நம்பகத்தன்மை இருக்க வேண்டும்.

தொகுதி உடன்பாடு காண்பதில் அந்த ஒற்றுமை வெளிப்படவேண்டும்.

இந்தக் கூட்டணியின் பொதுத் திட்டங்களில் இருந்து விலகி யார் உலை வைக்கிறார்களோ அவர்களை மக்கள் துடைத்தெறிய வேண்டும்.

யார் உறுதியாக நிற்கிறார்களோ அவர்களுக்கு அமோக ஆதரவு கொடுப்பதன்மூலம் தனிப் பெரும் சக்தியாக வளர உதவ வேண்டும்.

அந்த வகையில் கூட்டணி பலவீனம் அடைய விடக்கூடாது!..

அதுவே கூட்டணிக் கட்சிகளின் தர்மமும் மக்களின் கடமையும் ஆகும்!...

எந்த அணி இப்படிச் செய்யும்?...


Monday, January 25, 2016

எனது மொழி ( 203 )லெனின்......

மோசமான உலகின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்....

அவருடைய பெயரும் உலக மக்களுக்கு அவருடைய பங்களிப்பும் மறைந்து விட்டதாக வாழத் தகுதியற்ற பலர் நினைத்துக்கொண்டுள்ளார்கள்...

லெனின் பெயர் மறையட்டும் ,மறையாதிருக்கட்டும்...

துதிபாடிகளுக்குத்தான் பெயர் முக்கியம்!

அவரால் உலகமக்கள் மனதில் ஏற்ப்பட்ட சிந்தனைகளும் விளைவுகளும் ஆழமான பதிவுகளும் எப்படி மறைய முடியும்?

அவருடைய பாத்திரம் திரும்பப் பெற முடியாதது!

வரலாற்றை வழிநடத்திய சிலரில் அவர் முக்கியமானவர்!

லெனினைப் பற்றிய சரியான புரிதல் போதுமான அளவு ஏற்பட்டிருந்தால் இன்று உலகின் நிலை வேறாக இருந்திருக்கும்.

துரதிருஷ்டவசமாக அவரைப் பின்பற்றுபவர்களுக்கே போதுமான அளவு இல்லை!

மார்க்சியம் தோல்வி அடைந்தால் அப்போது உலகில் மனித இனம் இருக்காது!

காரணம் மற்ற பாதைகளைப் பின்பற்றியதன் பயனாக அனைத்தையும் பயனற்றதாக்கி அழிந்திருப்பான்.

முழு வெற்றி அடைந்தாலோ உலகம் சொர்கபூமியாகும்....

காரணம் உலகின் ஒவ்வொரு அணுவையும் பொருள் பொதிந்ததாக ஆக்கியிருப்பான்!

மார்க்சியத்தின் செயலாக்க முயற்சியே லெனினியம்.....Wednesday, January 13, 2016

எனது மொழி (202)

பீட்டா

ஜல்லிக்கட்டுக்கு தடை வந்ததும் மீண்டும் தடை வந்ததும் இவர்களால்தான் என்று பீட்டாவை மானாவாரியாக வசைபாடுவதைப் பார்க்கிறோம்.

நான் கேட்பது என்னவென்றால் பீட்டா நமது நாட்டு பாராளுமன்றத்தையும் நீதித் துறையையும் அடக்கியாளும் ஒரு சர்வாதிகார அமைப்பா?

அதனால் உலகுக்கு எந்த நன்மையையும் இல்லாவிட்டால் உலக நாடுகள்  எப்படி ஆதரிக்கின்றன?

அதன் செயல்பாட்டை நம் நாட்டில் எப்படி அனுமதித்தோம்?

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள சட்ட சரத்துக்களை முன் நிருத்தித்தானே அவர்கள் வாதாடியிருக்க முடியும்?

நமது அரசியல் சட்டப்படிதானே உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியும்?

அப்படியானால் உண்மையான கோளாறு எங்கே இருக்கிறது?...

சட்டத்தில் உள்ள மக்கள் விரோத அம்சங்களைத் துடைத்தெறிய வேண்டாமா?...

நாம் என்றென்றும் ஏமாளிகளாகவேதான் இருக்க வேண்டுமா?
Saturday, January 9, 2016

எனது மொழி ( 201 )

எது பாரம்பரியம்? 

ஜல்லிக்கட்டு மாடுபிடிக்கும் வீரர்களில் மற்றும் ஜல்லிக்கட்டு பிரியர்களில் எத்தனைபேர் நாள்முழுக்க ஏர்பிடிக்கத் தயாராக இருக்கிறார்கள்?

எத்தனை பேருக்கு ஏர் பிடிக்கத் தெரியும் ?

ஏர் பிடிக்கவும் பரம்பு ஒட்டவும் தெரிந்தவர்கள் மட்டுமே மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டால் நிலைமை சிக்கலாகிவிடாதா?

மாடு பிடிப்பது மட்டும்தான் பாரம்பரியத் தமிழர் பண்பாடா?

ஏர் உழுவது தமிழர் பண்பாடு அல்லவா?

https://www.facebook.com/photo.php?fbid=1017947811606231&set=a.244609168940103.64557.100001730669125&type=3&theater

Wednesday, January 6, 2016

விவசாயம் (89)
நண்பர்களே!

இப்போது இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தும் விவசாயிகள் மத்தியிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

ஆனாலும் எப்படி நஞ்சைவிட்டு வெளியில் வருவது என வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

நஞ்சில்லா உணவு பற்றிய விழிப்புணர்வு வளரும் வேகத்தில் நஞ்சில்லா விவசாயத்தின்  வளர்சிவேகம் இல்லை.


இந்த நிலையில் இயற்கை வேளாண்மை முன்னோடிகளின் செயல்பாடுகளும் இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டின் பல்வேறு நூல்கள் மற்றும் அமைப்புகளும் தனிநபர்களும் இயற்கை வேளாண்மை தொடர்பாக சரியான பாதையைப் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மண் வளத்தை மேம்படுத்துவது , எருவிடுவது, விதை நேர்த்தி, விதைப்பது, மேலுரம் இடுவது, பயிர்ப்பாதுகாப்பு, களை அழிப்பு, கால்நடை வளர்ப்பு,  போன்ற அனைத்திலும் இயற்கை வேளாண்மைக்கு என்று அனைவரும் பின்பற்றத்தக்க ஒரு பொதுவான திட்டவட்டமான வரைமுறை இல்லை.

அதனால் அனைத்து அம்சங்களிலும் பலரும் பலவிதமான முறைகளைப் பின்பற்றுகிறார்கள். பிறருக்கும் சொல்கிறார்கள்.

அவற்றில் நிறைய முரண்பாடுகள் உள்ளன,.

அதனால் கேட்பவர்கள் எது சரி என்று முடிவு செய்ய முடியாமல் மீண்டும் நச்சு முறையையே நம்பகமானது என்று நினைக்க ஏதுவாகிறது.

மேலும் நாடு முழுக்க அரசு ஆதரவுடன் ரசாயன அடிப்படையிலான விவசாயம் நடக்கும்போதே அதை ஒழித்துக்கட்ட அரசுத் திட்டங்கள் இல்லாவிட்டால்கூட  அதன் இடையில் இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறார்கள்.

வேதி உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயித்து முற்றிலும் தடை செய்யவேண்டிய அவசியத்தைக் காணத் தவறுகிறார்கள்.

அதனால் ஒட்டுமொத்த சுற்றுச் சூழல் இயற்கை வேளாண்மைக்குப் பாதகமாகவே நீடிக்கும் என்பதையும் காணத் தவறி விட்டார்கள்.

அதேபோல உற்பத்தியிலும் சந்தைப் படுத்துவதிலும் அரசுகளின் பங்களிப்பை சீர்திருத்த முயற்சி செய்யாமல் விவசாயிகளே குழுக்களாக ஒன்று சேர்ந்தால் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்பதுபோல நினைக்கிறார்கள்.

இவையெல்லாம் இயற்கை வேளாண்மையின் முன்னுள்ள பெரும் தடைகள் ஆகும்.

இவற்றையும் இன்னும் பலவற்றையும் தகர்த்தெறிந்து இயற்கை வேளாண்மை வெற்றிபெற வேண்டுமானால் விவசாயிகள் மத்தியில் வேளாண்மை தொடர்பான எழுச்சியும் அரசுகளை நிற்பந்திப்பதர்கான எழுச்சியும் ஒரு சேர சீறி எழ வேண்டும்.