ss

Wednesday, February 10, 2016

எனது மொழி ( 205 )

மனச் சாட்சிக்கு ஒரு கேள்வி...
ஓய்வூதியம் பெறுபவர்களைவிட ஓய்வூதியம் பெறாத மக்கள்தான் பலமடங்காக இருக்கிறார்கள்.
அனைவரிடமிருந்தும் பெறப்படும் வரிகள் மூலம்தான் சிறுபான்மையினருக்கு ஓய்வூதியமாக வழங்கப் படுகிறது.
கேள்வி என்ன வென்றால்....
ஓய்வூதியம் பெறுபவர்களைவிட ஓய்வூதியம் பெறாதவர்கள் எந்த வகையில் முக்கியம் அற்றவர்கள்?
லஞ்சமும் ஊழலும் செய்தே அளவற்ற சொத்து சேர்த்த எண்ணற்றவர்கள்கூட ஓய்வூதியமும் பெற்று சுக வாழ்வு வாழும்போது விவசாயிகள், தொழிலாளிகள், ஏழைகள் உட்பட மற்றவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆற்றிய எந்த மக்கள் பணியை மற்றவர்கள் ஆற்றவில்லை?
எதனால் மக்களிடையே இப்படிப் பாகுபாடு?
அனைத்து மக்களிடமும் பிடுங்கி சிலர் மட்டும் வசதியாக வாழக் கொடுப்பது என்ன தர்மம்?
பணியில் இருக்கும்வரை ஏற்றத்தாழ்வான வருவாயுடன் மக்கள் வாழ்வது இருந்து தொலையட்டும்.
ஓய்வுக் காலம் வந்தவுடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துகை மட்டும் ஓய்வூதியமாக ஒரே மாதிரி வழங்கப்பட்டால் என்ன?...
அதன்மூலம் வயதான அனைவரையும் அரசு காப்பாற்றுகிறது என்ற ஒரே நிலை வருமல்லவா?
அதைப் பெருமையாக நினைப்பவர்கள் மகிழ்வுடன் எஞ்சிய காலம் வாங்கி வாழட்டும்.
சிறுமையாக நினைக்கும் வசதி படைத்தவர்கள் விருப்பம் இல்லாவிட்டால் விட்டுக் கொடுக்கட்டும். அதை மற்றவர்கள் கூடுதலாக வாங்கி காலம் தள்ளட்டுமே!...
என்ன தவறு?..

1 comment:

  1. ஓய்வூதியம் மக்கள் வரிப்பணத்தில் இருந்தெல்லாம் தரப்படுவதில்லை. மாதச் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து, ஓய்வு பெற்றபின் அதை பயன்படுத்திக்கொள்வதே ஓய்வூதியம். விவசாயிகளும் மாதாமாதம் பணத்தை சேமித்து ஓய்வூதியம் பெற முடியும்.

    ReplyDelete