உயிரையும் கொடுக்கலாம்!...
தனது வாழ்வில் சந்திக்கும் அநீதிகளைத் தடுக்கவும் நேர்மையாக உழைத்து வாழவும் சட்டமும் நீதியும் துணைக்கு வராத ஒரு நிலையில் சராசரி மக்கள் என்ன ஆகிறார்கள்?
நேர்மையான வாழ்வில் நம்பிக்கை இழக்கிறார்கள்.
அக்கிரமங்களை எதிர்க்கும் துணிவற்ற கோழைகளாக ஆகிறார்கள்.
நேர்மையாக வாழ்ந்தால் வாழ முடியாது என்று சொல்லி நேர்மையற்ற வாழ்வுக்கு மாறுகிறார்கள்.
அதிகாரமும் வசதியும் படைத்த நேர்மையற்ற மனிதர்களையும் அண்டிப் பிழைப்பவர்களாக ஆகிறார்கள்.
வாய்ப்புக் கிடைத்தால் அத்தகையவர்களாகத் தாங்களும் ஆகிறார்கள்.
விரக்தியில் வீழ்ந்து முடிந்தால் வாழ்வது இல்லாவிட்டால் உயிரை விடுவது என்கிற தற்கொலை மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள்.
சமூக விரோதிகளாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் ஆகிறார்கள்.
பரந்த மனப்பான்மையும் சமூக சிந்தனையும் உள்ள சிலர் மட்டும் இத்தகைய நிலைக்கான காரணங்களை உணர்ந்து தவறுகளை எதிர்த்துப் போராடும் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
இத்தகைய பலவித மனோபாவங்களுடன் வாழும் மக்கள் வாழும் ஒரு நாடு வலிமைமிக்கதாகவும் உலக நாடுகள் மத்தியில் மதிப்பு மிக்கதாகவும் இருக்க முடியுமா?
இத்தனைக்கும் காரணமாக உள்ள ஒரே காரணமான சட்டமும் நீதியும் சராசரி மக்களுக்கு இல்லை என்கிற நிலையை மாற்ற ஒரு பகுதியினர் உயிரைத்தான் கொடுத்தால் என்ன?...
எஞ்சியிருப்பவர்களாவது நிம்மதியாக வாழ்வார்களே!....

No comments:
Post a Comment