ஆனந்த வாழ்வு
பொதுவாகவே அனைத்து உயிரினங்களும் ஆனந்த வாழ்வு வாழவே விரும்புகின்றன.
அதற்கு நாமும் விதிவிலக்கு அல்ல!
ஆனால் அப்படிப்பட்ட ஆனந்த வாழ்வை நடைமுறையில் வாழ்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை.
காரணங்களைப் பார்ப்போம்.
ஆனந்தம் என்பது உடல்பூர்வமானது உள்ளபூர்வமானது என இரண்டு வகைப்படும்.
அதில் உளப்பூர்வமானது என்பது எதிர்பார்ப்புகள் நிறைவேறும்போது கிடைக்கும் மனத் திருப்தியும் மகிழ்ச்சியும் ஆகும்.
உடல்பூர்வமானது என்பது நான்கு வகைப்படும்.
முதலாவது உண்ணும் உணவின் சுவையில் கிடைப்பது.
இரண்டாவது உண்ணும் உணவு கழிவுகளாக வெளியேறும்போது கிடைப்பது.
மூன்றாவது தாம்பத்திய உறவால் கிடைப்பது.
நான்காவது நோய்களில் இருந்து விடுபடும்போது கிடைப்பது.
முதலாவதான உணவின்மூலம் கிடைக்கும் சுவை என்பது நன்கு உழைத்து நன்கு பசித்து உண்ணும்போதுதான் கிடைக்கும்.
ஆனால் பசித்தாலும் பசிக்காவிட்டாலும் சுவைக்காகவும் அந்தந்த நேரத்தில் உண்ணும் பழக்கத்துக்காகவும் உண்கிறோம். உடலுழைக்காமல் வாழ்வதைப் பெருமையாக நினைத்துவாழ்கிறோம்.
அதனால் உண்மையான சுவையை இழப்பது மட்டுமல்ல பொய்யான சுவையைத்தேடி அலைவது மட்டுமல்ல அதனால் பல நோய்களையும் தேடிக்கொள்கிறோம்.
இரண்டாவது சுவை நாம் உண்ணும் உணவு நன்கு செரித்தபின்பு தேவையற்றவை உடலுக்குச் சுமையாக இல்லாமல் விட்டால்போதும் என்று வெளியேறும்போது கிடைப்பது.
அந்தச் சுவையையாவது அனுபவிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
நாம் உண்ணும் உணவுகள் தபால்காரனைப்போல நமக்குக்கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டு வேகமாக வெளியேறவேண்டும்.
அப்படி வேண்டாத கழிவுகள் வெளியேறும்போது கிடைக்கும் ஆனந்தம்
சிறப்பானது.
பல்வேறு காரணங்களால் தாமதித்து மிகுந்த அவஸ்தைக்குப் பின்னால் கழிவுகள் வேகமாக வெளியேறும்போது அதற்கு ஈடான சுகமாக எதையும் நினைக்க முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.
அப்படிப்பட்ட சுகம் ஒவ்வொரு தடவை மலஜலம் கழிக்கும்போதும் கிடைக்கிறதா?
நிச்சயம்இல்லை
காரணம் அத்தகைய சுகத்தை நாம் உண்ணும் உணவுகளும் உடலுழைப்பின்மையும் கொடுப்பதில்லை.
ஆனாலும் வேண்டாத விருந்தாளிகளாய் உடம்போடு ஒட்டிக்கொள்ளும் உணவுகளையும் உழைப்பின்றி வாழ்தலையும் உயர்வாக நினைத்து வாழ்கிறோம்.
அதனால் கழிவுகள் வெளியேறும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்குப் பதிலாக மலச் சிக்கலையும் மூலநோயையும் அவற்றால் தோன்றும் இதர நோய்களையும் வரமாகப் பெற்று அவலவாழ்வு வாழ்ந்து வருகிறோம்.
தாம்பத்திய உறவால் கிடைக்கும் மூன்றாவது சுகத்தை முழுமையாக
அடைய உடலாலும் உள்ளத்தாலும் தகுதியற்றவர்களாகப் பெரும்பாலோர் வாழ்வதால் அது ஒழுக்கக்கேட்டுக்கு இணையான ஒன்றாகிவிட்டது.

நான்காவது சுவையான நோய்களில் இருந்து குணமடையும்போது கிடைக்கும் சுவையும் இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது.
காரணம் இயல்பான உடல்வாழ்வையே தகுதியற்றதாக ஆக்கிக்கொண்டதே.
அதன்காரணமாக அதிகம் பாதிக்கும் அவசர நோய்களில் இருந்து தாற்காலிக நிவாரணம் பெறுவதுதான் நோயற்ற வாழ்வு என்பதாகச் சுருங்கி விட்டது.
நோய்களில் இருந்து முழுத் தகுதியுடனான உடல்வாழ்க்கைக்குத் திரும்புவது என்கிற சுவையையும் பெரும்பாலோர் சுவைப்பது இல்லை.
அதனால் மருத்துவர்களுக்குக் கப்பம் கட்டும் வாழ்வாகவே பெரும்பாலோரது வாழ்வு இருக்கிறது.
மனித வாழ்க்கைக்குத் தேவையான இந்தச் சுவைகளைஎல்லாம் இழந்துவிட்டு அல்லது சிக்கலாக்கிவிட்டு உடலாலும் உள்ளத்தாலும் சுவையற்ற வாழ்வு வாழ்ந்து வருகிறோம்.
இந்தச் சுவைகளைஎல்லாம் யார் மீட்டெடுக்கிறார்களோ அவர்கள் மட்டுமே உண்மையான ஆனந்த வாழ்வு வாழ்பவர் ஆவார்கள்!
மற்றவர்கள் அத்தகைய கனவுகளுடன் அதற்கு எதிரான வாழ்வையே விதியென நினைத்து வாழவேண்டியதுதான்!
....ஒவ்வொரு விளக்கமும் மிகவும் அருமை ஐயா....
ReplyDelete