கள்ளும் பதநீரும்....
நாம் எத்தனையோ உணவு வகைகளை திட வடிவிலும் திரவ வடிவிலும் உண்கிறோம்.
அதில் பல உயிர்வாழ்வதற்கான அவசிய அடிப்படைகளாகவும் வேறு பல அவற்றின் நற்பயனுக்காக அல்லாமல் சுவைக்காகவும் விரும்பி உண்ணப்படுகின்றன.
இன்னும் சில அடிப்படைத் தேவையும் இல்லாமல் சுவையும் இல்லாமல் உண்ணப்படுகின்றன.
அதற்குக் காரணங்கள் இரண்டு.
முதலாவது மருத்துவப் பயன்.
இரண்டாவது போதை.
ஆதாவது மனதை மயக்கி நடைமுறை வாழ்விலுள்ள பிரச்சினைகளில் இருந்து நம்மை விலக்கி வைத்து அதை இன்பமான அனுபவமாக உணரவைத்துத் தார்க்காலிக விடுதலையையும் நிரந்தரத் துன்பத்தையும் அளிப்பது.
இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான் கள் ஆகும்.
கள் என்பது பெரும்பகுதி பனைமரம் தென்னைமரம் ஆகியவற்றிலிருந்தே இறக்கப் படுகிறது.
துவக்கத்தில் கள்ளாக இறங்குவது அதன்பின் பதநீராகவும் கருப்பட்டியாகவும் கற்கண்டாகவும் பல பொருட்களாக மாற்றப்படுகிறது.
அவற்றில் மிகவும் அதிகப் பயன்பாட்டில் இருப்பது கருப்பட்டி.
அதற்கு அடுத்து அனைவராலும் விரும்பப்படுவது சுத்தமான பதநீர்.
மதுப் பிரியர்களால் மிகவும் விரும்பப்படுவது கள் ஆகும்.
தென்னை பனை மரப் பாளைகளில் இருந்து சீவி அப்படியே எடுத்தால் அது கள் ஆகும் .
கள் இறக்கும் முட்டிப்பானையில் சுண்ணாம்பு தடவி இறக்கினால் அது பதநீர்.
ஆனால் இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
சுண்ணாம்பு தடவப்பட்டால் அது இனிப்பு மற்றும் காரச் சுவையுள்ள பதநீராக மாற்றம் பெறுகிறது. அருந்தினால் சுவையான பானமாக உணரப்படுகிறது.
குழந்தைமுதல் பெரியவர்வரை யார்வேண்டுமானாலும் யார் முன்னிலையிலும் அருந்தலாம். மதிப்பு மிக்க செயலாகப் பார்க்கப்படும்.
அதைக் காய்ச்சினால் கருப்பட்டியும் கிடைக்கிறது.
ஆனால் சுண்ணாம்பு தடவாமல் இறக்கப்படும் கள் புளிப்புச் சுவையுள்ள மதுவாக ஆகிறது.
அதை அனைவரும் விரும்புவது இல்லை.
அனைவர் முன்னிலையிலும் மரியாதையுடன் அருந்த முடியாது.
ஒழுக்கக் கேட்டின் ஒரு அங்கமாகவும் நிறையப்பேர் நினைப்பதுண்டு.
ஆனால் இன்னொரு சாரார் இருக்கிறார்கள்.
ஆதாவது கள் தென்னை பனை மரங்களில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் பானம் ஆனதால் உடலுக்கு நல்லது மருத்துவ குணம் நிரம்பியது என்றெல்லாம் அதன் சிறப்பைச் சொல்லி கள் இறக்கவும் குடிக்கவும் அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை கள்ளும் பதநீரும் ஒன்றே.
காரணம் இரண்டும் இயற்கையாகக் கிடைக்கின்றன. சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன என்பதே.
கள்ளைப் பதநீரைவிட ஒரு பங்கு உயர்வாகவும் நினைக்கிறார்கள்.
காரணம் அதில் சுண்ணாம்பு சேர்ப்பதில்லை. அதனால் இயற்கைப் பண்பு பாதிப்படையாமல் கிடைக்கிறது என்பதே.
ஆனால் உண்மை அதுவா?
கள் குடிப்பதற்கான காரணம் அதிலுள்ள சத்துக்களும் இயற்கையாகக் கிடைக்கும் பானம் என்பதும் தானா?
நிச்சயம் கிடையாது!
போதையல்லாத காரணங்கள்தான் என்பது உண்மை என்றால் போதை வராத சுவையான இயற்கை பானங்கள், மூலிகைச் சாறுகள் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு என எத்தனையோ குடிக்கலாமே?
சுவையற்ற கள்ளுக்கு எதற்கு தனி மரியாதை?
தவிர, கள்ளை இயற்கை உணவு என்று சொல்ல முடியாது.
காரணம் அது இயற்கையில் கிடைத்தாலும் சுவை கிடையாது.
சுவையற்ற எதுவும் நல்ல இயற்கை உணவு ஆகாது.
அதனால் கள்ளில் உள்ள நன்மைகளைக் கணக்கில்கொண்டு மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன் படுத்தலாம்.
மது போதைக்காகக் குடிக்க நினைப்பதை இயற்கை பானம் என்பதால் குடிக்கலாம் என்று சொல்லி ஒருவர் தன்னையும் ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்றக் கூடாது.
கள்ளுக் கடைக்கு ஓடுவதும் குடித்துவிட்டுத் தெருவில் கிடப்பதும் கள்ளில் உள்ள நல்ல பயன்களுக்காக அல்ல!
போதை ஒன்றுக்கே!
ஆனால் பதநீர் அப்படி அல்ல!
அதுவும் கள்ளைப் போலவே தென்னை பனை மரங்களிலிருந்து இறக்கப் பட்டாலும் போதை தருவது இல்லை. மது செய்யும் தீமைகளைச் செய்வதும் இல்லை.
மாறாக அத்துடன் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் சுவையான பானமாக மாற்றம் அடைகிறது.
சுண்ணாம்பு என்பது உடல்நலத்துக்கு எதிரானது அல்ல.
தவிர விரும்பி உண்ணத் தகுதியற்ற கள்ளை சுவையான பானமாக ஆதாவது இயற்கை பானமாக மாற்றுகிறது.
அதனால் பதநீரே சிறந்த பானம் .
கள் என்பது மதுவும் சில நேரங்களில் மருத்துவப் பொருளும் மட்டுமே!
அதே சமயம் மற்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கையான மது வகைகளை உற்பத்தி செய்து விற்றுக் குடிக்கவைத்து மக்களை மாக்களாக்குவதைவிட கள் இறக்கி விற்க அனுமதிப்பது குறைந்த தீமைகளைக் கொண்டது.
பல விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயைக் கொடுக்கக் கூடியது.
அதனால் கள்ளைத் தவிர்ப்போம். பதநீரைப் பயன்படுத்துவோம்!

No comments:
Post a Comment