1. ஆறுகளும் அடர்ந்த மேகங்களும் அளவற்ற நன்னீரைக் கொட்டினாலும் கடல்நீர் உப்பாகவே உள்ளது. அதுபோல் என்னதான் அறிவுரைகள் கற்றாலும் பிறர் சொன்னாலும் சிலர்மட்டும் திருந்தாத கீழ்மக்களாகவே இருக்கிறார்கள்.
2. ஆடுகளின் நலன் பற்றி ஓநாய்கள் பேசினால் அது நயவஞ்சகம். மக்களின் நலன் கெடுத்தோர் நாட்டு நலன் பற்றிப் பேசுவதும் அத்தகையதே!
3. களைப்படைந்த உடம்பைப் பிடித்து விடுவதால் சுகமும் தெம்பும் கிடைக்கிறது. அதுபோல் சோர்வுற்ற மூளைக்கு சுகத்தையும் தெம்பையும் ஊட்டுபவையே நல்ல கலை இலக்கியங்கள் ஆகும்.
4. வலியவனின் வாழ்வுக்கும் எளியவனின் தாழ்வுக்கும் வயது வித்தியாசம் கிடையாது.
5. காலத்துக்கும் தூரத்துக்கும் எல்லை இல்லை. நம் அறிவும் ஆற்றலும் அப்படியே!
6. துன்பங்கள் முட்டாள்களுக்கும் தீயவர்களுக்கும் தண்டனைகளாகவும் அறிவாளிகளுக்கும் நல்லவர்களுக்கும் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுக்களாகவும் அமைகின்றன.
7. உணர்வுகள் வேறுபட்டால் தாயன்பும் தீயதாகும்.
8.அறிவின்பால் ஈர்க்கப்படும் காதல் உயர்ந்தது. உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும். உணர்வின்பால் ஈர்க்கப்படும் காதல் பலவீனமானது. மீளமுடியாத துன்பத்தில் தள்ளிவிடும்.
9. உயர்ந்த நோக்கம் நிறைவேறுதலும் அந்தநோக்கத்துக்காகத் துன்பப்படுதலும் மனத்தளவில் ஒன்றுதான்.
10. ஒருமுட்டாளின் நூறு தவறுகளைவிட ஒரு அறிவாளியின் ஒருதவறு மோசமானது.
அருமையான மொழிகள் தாம். .
ReplyDeleteநன்றி நண்பர் சுப்பிரமணியம்!
Deleteஅருமை. மனதில் விதையாக ஊன்றி உழுதிட வேண்டிய கருத்துக்கள். நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஐயா,
ReplyDeleteதங்களின் பொன் ( மொழி)கள் மிகவும் அருமை !!!
ஒருமுட்டாளின் நூறு தவறுகளைவிட ஒரு அறிவாளியின் ஒருதவறு மோசமானது.
ReplyDelete### இதை படிக்கும் போது August 2nd 1939 -ல் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் தான் என் சிந்தனைக்கு வருகிறது. பிற்காலத்தில் அவரே மிகவும் மனவருத்தப்பட்டு ஒத்துக்கொண்ட சரித்திர புகழ்பெற்ற ஒரு சிறு தவறு!! (http://hypertextbook.com/eworld/einstein.shtml)