மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்ப்பறவை எங்கோ சென்று இறைதேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பிவந்தபோது திடுக்கிட்டு அலறியது.
ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பது அதன் நோக்கம்.
தாய்ப்பறவையால் அந்தப்பாம்பை என்னசெய்ய முடியும்? பாம்பண்ணா! பாம்பண்ணா!
என்று அலறியது.
பாம்பு சட்டை செய்யவில்லை.
பாம்பண்ணா! பாம்பண்ணா! ஒரு நிமிஷம் நான் சொல்றதக் கேளண்ணா! மீண்டும் மீண்டும் தாய்ப்பறவை அலறியது. திரும்பிப்பார்த்த பாம்பு,
ஏன் எதற்காகக் கத்துகிறாய்? என்றது
அண்ணா! நீங்க எவ்வளவு பெரியவங்க! உங்களக் கண்டு பயந்துட்டு இருக்கிற எங்கமேலெ நீங்க இரக்கப்படக் கூடாதா?
அப்படியா?
ஆமாங்க அண்ணா உட்டுடுங்க! நாங்க பொழைச்சுப் போறோம்
நான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுவியா?
சொல்லுங்க அண்ணா!
உன் வாயிலெ என்ன வெச்சிருக்கே?
என் குஞ்சுகளுக்கு கொஞ்சமா இரை கொண்டுவெந்தேன் அண்ணா!
என்னது?
சின்னப் புழுக்கள் அண்ணா!
இப்பச் சொல்லு! நீ ஏன் அந்தப் புழுக்களுக்கு இரக்கங் காட்டலே?
அந்தப்பறவையால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
இதுதான் நமது வாழ்க்கை விதி! உன்னைவிட பலங் குறைந்தது உனக்குத் தீனி! என்னைவிட பலங்குறைந்தது எனக்குத் தீனி! அப்படி இல்லாம வாழ வழி இருக்கிற மனுஷங்களே அப்படி வாழ்றது இல்லே! நம்மாலெ எப்படி வாழமுடியும்? இருந்தாலும் என்னை அண்ணான்னு அன்போடு பலமுறை கூப்பிட்டெ இல்லே, அதனால உனக்கு என்னாலெ எந்த ஆபத்தும் இல்லெ. என் பசிக்கு நான் வேறெ வழி பாத்துக்கிறேன்!
பாம்பு போய்விட்டது. அந்தத் திசையையே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றது தாய்ப்பறவை!
மனிதத்தை மறந்த மனிதன் விலங்கே .. என்று அந்த பாம்பு சொல்கிறது.
ReplyDeleteநன்றி நண்பர் சுப்பிரமணியம்!
Deleteஅருமையாக சொன்னிர்கள்
ReplyDeleteநன்றி நண்பர் குணாளன்!
Deleteசிந்திக்க வைக்கும் சிறுகதை
ReplyDeleteநன்றி நண்பர் சீனு ராஜன்!
Deleteவாழ்க்கை தத்துவமும் இதுதான் ...!துன்பத்தின் வீரியமும் இதுதான்...!!அருமை..அய்யா..!
ReplyDeleteunarvukkum uravukkum ulla inaippu. good! respect other's feelings! this is the theme.
ReplyDeleteசிந்திக்க வைக்கும் அழகான குட்டி கதை! :)
ReplyDelete