பிறந்தேன்
தவழ்ந்தேன்
வளர்ந்தேன்
வாழ்ந்தேன்
வீழ்ந்தேன்
எழுந்தேன்
வீழ்ந்து வீழ்ந்து
எழுந்தேன்!
வாழ்வு இதுதான் என
உணர்ந்தேன்...!
உணர்ந்தபோது...!
வாழத்தான்
வயதில்லை...!
தவழ்ந்தேன்
வளர்ந்தேன்
வாழ்ந்தேன்
வீழ்ந்தேன்
எழுந்தேன்
வீழ்ந்து வீழ்ந்து
எழுந்தேன்!
வாழ்வு இதுதான் என
உணர்ந்தேன்...!
உணர்ந்தபோது...!
வாழத்தான்
வயதில்லை...!
அய்யா ! உங்கள் அனுபவம் மற்றவர்கள் வாழ வழி செய்யட்டும் ...வாழ்த்துக்கள் !
ReplyDelete-தஞ்சை தேவா
நன்றி நண்பர் தேவா! நமது கடமையைச் சிறப்பாகச் செய்வோம்! நடப்பது நல்லதாக இருக்கட்டும்! வாழ்த்துக்கள்!
Deletearumaiyanathu ellarukkum porunthum ondru.....
ReplyDeleteநன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!
Deleteஉணர்ந்தவர் உரைத்ததை
ReplyDeleteஉள்ளதோடு கொண்டவன்
உணர்ந்து நடந்தவன்
வீழ்ந்தாலும் எழுகிறான்
அவன்
வாழ்க்கையில் வென்றவன்
என்றும் வாழ்பவன் அய்யா !!
உங்கள் எழுச்சி தொடரட்டும்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பர் சுப்பிரமணியம்! உங்களுடைய சிறந்த ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்!
Deleteதமிழ் பதிவு....
ReplyDeleteஆங்கிலத்தில் முரசு கொட்டுகிறதே!!
கொட்டட்டும், கொட்டட்டும்.
:)
நன்றி நண்பர் சரவணக்குமார்! சரியான தமிழ்ச் சொற்கள் ஆய்வில் உள்ளது. வெப்சைட் முகவரி தமிழரல்லாதவரும் புரிந்துகொள்ள எதுவாகத்தான் ஆங்கில வார்த்தைகளால் ஆக்கப்பட்டது.உலகளாவிய சிந்தனைகளையும் பங்கேற்ப்பாளர்களையும் கொண்டதாக இது வளரவேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் உருவானது. தாய்மொழியை அலட்சியம் செய்பவர்களா நாம்? உங்கள் பங்கும் சிறப்பாக இருக்கட்டும்!வாழ்த்துக்கள்!
Deleteஇனிய நண்பர் சுபாஷ்அவர்களே.
ReplyDeleteவணக்கம்!
உங்கள் பணி நாளும் சிறந்திட நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்
என் நண்பர், எண்ணிய எண்ணியாங்கு எய்திட எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்
உணர்ந்ததை சொல்லி, உணராதோரை உணர்ந்திட செய்யும் உயர்ந்த பணி இருக்கையில் உறுத்தல் ஏனோ நண்பரே?
உண்மையை உரத்து சொல்லுங்கள்,முழங்கட்டும் முரசு எட்டு திக்கும்!
நன்றி நண்பர் துரை அவர்களே! நான் ஏதாவது செய்யவேண்டும் என்ற உங்களின் விருப்பத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றியுள்ளேன். இனி அடுத்து இதைத் தளமாகப் பயன்படுத்தி அடுத்த நிலைக்குப் போவோம். எப்படியோ நமது உயர்ந்த நோக்கங்களை மக்களின் நோக்கங்களாக மாற்ற நமது அறிவுத் திறனை ஆக்க ரீதியில் பயன்படுத்துவோம்!சிறு நெருப்பும் பெரும் காட்டுத் தீயை உருவாக்கும்!
Deleteவாழ்த்தட்டும் தலைமுறை !!விடியட்டும் புதிய உலகு !!
ReplyDeleteநன்றி நண்பரே! நல்ல உள்ளம் படைத்தோர் சந்தித்து தொடர்ந்து சிந்தித்து பயனுள்ள செய்திகளை உலகுக்கு வழங்க இது ஒரு தளமாக, உந்து சக்தியாகப் பயன்படவேண்டும் என்பது எனது விருப்பம்! தம்பியுடையான் படையஞ்சான் என்பார்கள். நல்ல நண்பர்களை உடையான் மட்டும் அஞ்சுவானா?.....
Deleteவணக்கம் நண்பர்களே! இது வரை இதில் இணைந்துள்ள அத்தனை நண்பர்களையும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறேன்! உயர்ந்த லட்சிய நோக்கில் துவங்கப்பட்டுள்ள இந்த வலைதளத்தை சிறப்பாகக் கொண்டுசெல்ல உங்கள் ஒவ்வொருவரின் சிறந்த பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன்!நன்றியும் வாழ்த்துக்களும்!
ReplyDeleteஇளம்பருவத்தில் பலர் சாதனையாளர்களாக விளங்குவதைப் போல முதுமைப் பருவத்திலும் உலகில் பலர் சாதனைகள் புரிந்துள்ளனர்.
ReplyDeleteஅய்யா, நீங்கள் சாதிக்க , இந்த மண்ணில் இன்னமும் ஏராளம் இருக்குதய்யா. தொடருங்கள் உங்களது சாதனையை. இன்புற்று உங்களை தொடர்ந்திட நாங்கள் இருக்கிறோம். தந்தை பெரியார், ராஜாஜி போன்றவர்களைப்போல் நீண்ட ஆயுள் உங்களுக்கு இருக்கட்டும்.
உங்கள் வாழ்த்துக்களை நான் அரிய பொக்கிஷமாகக் கருதுகிறேன் ஐயா! உங்களைப் போன்ற நல்லுள்ளம்கொண்ட நண்பர்களின் துணையுடன் எனது வாழ்நாளில் நல்ல பாதையில் மேலும் சில அடிகள் முன்னேற முடியும் என நம்புகிறேன்! நன்றிகள் ஐயா!
Deleteஉங்கள் கருத்துக்களும் , கவிதைகளும் எனது உள்ளம் கவர்ந்தது.. இப்படிக்கு சக்தி(உரல்பட்டி)
ReplyDelete