ss

Tuesday, April 10, 2012

கெட்ட பழக்கங்கள் (1)

புகை பகையான கதை!
நான் புகை பிடிப்பதை நிறுத்திய அனுபவம் வித்தியாசமானது. என்னிடமிருந்த ஒரே கெட்ட பழக்கம் அதுதான். இருபத்தியேழு வயதில் துவங்கி நாற்து வயதுவரை பதின்மூன்று வருடங்கள். கடைசியில் தினசரி மூன்று பாக்கெட் சிகரெட் வேண்டும்.


ஒரு நாள் மிகவும் மோசமான மனநிலையில் ஒரே தீக்குச்சியால் ஒரு சிகரெட் பற்றவைத்தவன் தொடர்ந்து பத்தொன்பது சிகரெட்டை ஊதித் தள்ளியிருக்கிறேன்.

ஒரு நாள் இரண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது புகைப் பழக்கத்தை நிறுத்தப் போவதாகச் சொன்னேன். அவர்கள் என்னால் அது முடியாது என்று சாதித்தார்கள். அப்போது என்னுடைய பாக்கெட்டில் இரண்டு சிகரெட்டுகள் இருந்தன. அதுதான் என் வாழ்வில் கடைசி இரண்டு சிகரெட்டுகள் என்றேன். அவர்கள் அதை நம்ப மறுத்தார்கள்.

நான் உடனே அந்த இரண்டு சிகரெட்டுகள் அடங்கிய பெட்டியை அப்படியே கசக்கித் தூக்கிச் சாக்கடையில் எறிந்தேன். இப்போது இருபத்தியொரு வருடங்கள் ஆகின்றன. மீண்டும் அதைத் தொட மனதாலும் நினைக்கவில்லை.

துவக்கத்தில் சிலநாட்கள் சிரமமாகவும் அதே நினைவாகவும் இருந்தது. அதற்காக நான் சிறிது சம்பா கோதுமையை தயாராய் வைத்திருப்பேன் புகை ஞாபகம் வரும்போது கொஞ்சம் கோதுமையையும் அத்துடன் ஒரு சிறு துணுக்கு ஏலக்காயையும் வாயில் போட்டு மென்றுகொண்டிருப்பேன். அது சுயிங் கம் போன்று நீண் நேரம் வாயில் இருக்கும்.

புகையோடு சேர்த்து காபி டீ பழக்கத்தையும் ஒரே நேரத்தில் ஒழித்துக் கட்டினேன். அதற்காக நான் செலவு செய்து வந்த துகையை சிறு சேமிப்பில் போட்டுக் கணக்குப் பார்த்தேன். மூன்று வருடங்களில் நாற்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது. அதைக் கொண்டு நான் வாங்கிய ஸ்பிளெண்டர் மோட்டடார் சைக்கிளைத்தான் கடந்த பதினேழு வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். அது இப்போது எனது நினைவுப் பொருளாகிவிட்டது!

அத்தோடு எந்தெந்தச் சூழலில் எல்லாம் உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததோ அந்தச் சூழலைத் தவிர்க்கவும். 

சாப்பிட்டவுடன் புகைபிடிப்பதைவிட இண்டரெஸ்டிங்கான விஷயங்களில் ஈடுபடுங்கள். 

நான் செய்தது என் மனைவியுடன் சீட்டாடுவது!...

திருமணம் ஆகாதவராக இருந்தால் கேரம்போர்ட் அல்லது செஸ் ....

இந்த வழியில் சிந்தியுங்கள்!

புகை நினைவுக்கு வரும்போது அந்தப் புகை வழியே நீங்கள் மீள முடியாத நோயில்  படுத்திருப்பதாகவும் உங்கள்மேல் அன்பு செலுத்தும் அனைவரும் கண்கலங்கி நிற்பதாகவும் நினைத்துப் பாருங்கள்!


அதனை நண்பனாக நினைக்காமல் பகைவனாக எண்ணுங்கள்!....

புகைபிடிப்பதால் என்ன கிடைக்கிறது என்று நினைக்கிறோமோ அது புகையை நிறுத்தும் போதுதான் கிடைக்கும். 

இது என் அனுபவம்....

5 comments:

 1. அருமையான பகிர்வு சார். இது மாதிரி இன்ஸ்பிரேஷன்ஸ்தான் இந்தக் கால இளைஞர்களுக்குத் தேவை. சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். :)

  ReplyDelete
 2. நன்றி அம்மா!.

  ReplyDelete
 3. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.!

  http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_19.html?

  ReplyDelete
 4. இந்த விசயம் எனக்கு இந்த நிமிடம் வரை அவசியமில்லாத ஒன்று இருப்பினும் பொதுநலம் கருதி தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு பொது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
  தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவின் வாசம் காண வருக,,,, பிடித்தால் ? மீண்டும் வருக,,,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வலைச்சர அறிமுகத்திற்க்கு எமது வாழ்த்துக்கள்.

   Delete