அமைதி
ஆகாய கங்கையான பால்வெளி மண்டலம் உருவத்தால் அமைதியாகக் காட்சி தருகிறது.ஆனால் கோடானுகோடி நட்சத்திரக் குடும்பங்கள் அதனுள் இயங்கிக்கொண்டுள்ளன.
சூரியனும் சதாகாலமும் ஒளியையயும் வெப்பத்தையும் உமிழ்ந்துகொண்டு தனது இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தாலும் வெளித் தோற்றத்துக்கு சீராக, அமைதியாக இருப்பதைப் போன்று தெரிகிறது.
பூமியும்கூட தனக்கு உள்ளேயும் வெளியேயும் பிரம்மாண்டமான இயக்கங்கள் நடந்தாலும் வெளித் தோற்றத்துக்கு ஒட்டு மொத்தமாக அமைதியே வடிவெடுத்ததுபோல் காட்சி தருகிறது.
இவையெல்லாம் பேரியக்கங்களை உள்ளடக்கி யிருந்தாலும் சாராம்சத்தில் பேரமைதியுடன் காட்சி தருகின்றன.
அதுபோல் மனிதவாழ்விலும் எண்ணற்ற இயக்கங்களையும் இன்பதுன்பங்களையும் உள்ளடக்கியிருந்தாலும் மனதை அமைதியில் லயிக்கச்செய்வதும் அசையாத அமைதியுடன் மனதை வைத்துக்கொண்டு செயல்புரிவதும் ஒப்பற்ற வாழ்வுமுறையாக விளங்கும்.

No comments:
Post a Comment