விடிவு!
நாட்டில் நல்ல மனிதர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்! கல்வியாளர்களும் அறிஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். தேசப்பற்று மிக்கவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
நமது தேசத்தின் பாரம்பரியமும் மிகச் சிறப்பானது! வாழ்ந்து மறைந்த மேதைகளுக்கும் முன்னோர்களுக்கும் பஞ்சமில்லை!
கலைகளும் பண்பாடும் வீரமும் விவேகமும் தழைத்தோங்கிய நாடு. புத்தரைப்போன்று வள்ளுவரைப்போன்று பகத்சிங்கைப்போன்று மாமேதைகளும் மாவீரர்களும் தோன்றிய நாடு!
அத்தகைய ஒருநாட்டை.......
திருடர்கள் ஆள்கிறார்கள்!
பொய்யர்கள் உண்மையைப் பற்றிப் பேச மெய்யறிவு உள்ளவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்!
காட்டுமிராண்டிக் குணம் படித்தவர்கள்தான் கற்பிக்கவேண்டிய கலைகளைப்பற்றித் தீர்மானிக்கிறார்கள்!.
உயர்ந்த நீதிநெறிகள் எல்லாம் காசுக்குமுன்னால் மண்டியிட்டுக் கிடக்கின்றன.
சட்டம் படித்தவர்கள் எல்லாம் சமூகவிரோதிகள் கொடுக்கும் காசுக்காகச் சேவை செய்கிறார்கள்!
சேவைக்காக நியமிக்கப்படும் அதிகாரிகளில் பெரும்பாலோர் கொள்ளைக்காரர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கிறார்கள்!
நிறையப்பேர் இந்தக் கொள்ளைக்காரர்களைவிட வெள்ளைக்காரன் பரவாயில்லை என்கிறார்கள்!
மொத்தத்தில் மக்களின் விதியை மாக்கள் தீர்மானிக்கிறார்கள் !
ஆடுகளின் பாதுகாப்பு ஓநாய்களின் கையில்!
எப்போது விடியும்?
No comments:
Post a Comment