தியாகம்
இவ்வுலகில் வாழும் மக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
பிறர்க்குத் தீங்கிழைத்து வாழ்வோர், நன்மை தீமை இரண்டுமின்றி தன்னளவில் வாழ்வோர், தான் துன்பப்பட்டாகிலும் பிறர்க்கு உதவி வாழ்வோர் என்பவை தான் அந்த மூன்று வகைகள்.

இதில் பிறரைத் துன்புறுத்தி வாழும் வகையினர் சமுதாயத்தின் கடைத்தரமானவர்கள்.
காரணம் அவர்கள் இயல்பான மனித வாழ்க்கைக்கு எதிரானவர்களும் பண்பாடற்றவர்களும் ஆவர். எனவே அவர்கள் சமுதாயத்தின் முன்னோடிகள் ஆகமுடியாது என்பது மட்டுமல்ல ஒதுக்கித் தள்ள வேண்டிய குப்பைகளுமாவர்.
திருந்தினால் மட்டுமே அவர்கள் வாழத் தகுதி பெற்றவர் ஆவர்.

நன்மை தீமை இரண்டிலும் படாமல் தன்னளவில் வாழ்வோர் இரண்டாம் வகையினர் ஆவார்கள்.
கால வெள்ளத்துக்கும் சமுதாயப் போக்கிற்கும் தம்மை அனுசரித்துக்கொண்டு வெளியுலகைப் பற்றிக் கவலைப்படாத சுயநலவாதிகள் இவர்கள். அவர்கள் சமூகத்துக்கு நேரடியாகத் தீங்கு செய்யாவிட்டாலும் தீமைகளைக் கண்டும் காணாதவர்களாய் இருப்பதால் தீமைகள் வளர மறைமுகமாய்த் துணைநிற்பவர்கள் இவர்கள்.
எனவே அவர்களைத் தீய சக்திகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்லவர் என்றும் சொல்ல முடியாது. அவர்கள் இடைத்தரமானவர்கள்.

ஆனால் தம்வாழ்வில் ஏற்படும் பல்வேறு இன்னல்களையும் தாங்கிக்கொண்டு பிறருக்காகவும் சமுதாயத்துக்காகவும் நன்மை செய்யும் நோக்குடன் செயல்படுவோர் இருக்கிறார்கள்.
அவர்கள் தமக்காக மட்டும் சிந்திப்பதில்லை. பொதுவாக சிந்திக்கிறார்கள். பிறருடைய இன்பதுன்பங்களைத் தம்முடையதைப்போல் பாவிக்கிறார்கள்.

தம்முடைய துன்பத்தைப் பிறர்க்குக் காட்டத் தயங்குபவர்களாகவும் பிறருடைய துன்பத்தில் தாம் பங்கேற்கத் தயங்காதவர்களாகவும் வாழ்கின்ற அவர்கள்தான் உயர்ந்தவரகள்.
அவர்கள்தான் சமுதாயத்தின் முன்னோடிகளும் வழிகாட்டிகளும் ஆவர்.

அத்தகைய நல்லோர் தாம் வாழ்வாங்கு வாழ்வதோடு அத்தகைய வாழ்வு மற்றவர்களும் வாழவேண்டும் என எண்ணுகிறார்கள்.
மனித இனத்தின் வாழ்வு எப்படி இருந்தால் நலமான சமுதாய வாழ்வுக்குப் பொருத்தமாக இருக்குமோ அப்படிஇருக்க விரும்பும் இவர்கள் தீமை செய்ய அறியாதவர்கள். தீமையைக்கண்டு அஞ்சாதவர்களும் கூட.

அத்தகைய குணம் படைத்தோர் தம் பாதையில் அவ்வளவு எளிதாகச் செல்ல இயலாது. காரணம் இவ்வுலக வாழ்வின் தற்கால நிலைமைகள் நல்லோரின் செயல்களைப் புரிந்து கொள்ளவும் பின்பற்றவும் செய்வதற்குப் பதிலாகப் புண்படுத்தும் மற்றும் எதிர்க்கும் நிலையில்தான் உள்ளது.
எனவே நல்ல காரியங்களைக்கூட தீமைகளை எதிர்த்து நின்றுதான் செய்ய வேண்டியுள்ளது. அதனால் நல்லோரின் செயல்கள் நல்லதாக இருப்பினும் அதைச் செய்யும் பாதையில் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகிறார்கள்.
சில நேரங்களில் கடும் துன்பத்துக்கு ஆளாவதோடு உயிருக்கேகூட ஆபத்தாய் முடிகிறது. இருந்தாலும் அத்தகையோர் தொடர்ந்து தன்னை வருத்தி பிறருக்கும் சமூகத்துக்கும் நன்மை செய்யவே விரும்புகின்றனர். அத்தகையோரின் செயலைத்தான் தியாகம் என்று சொல்கிறோம்.
பிறர் பாராட்டவேண்டும் என்பதற்காக வெளித் தோற்றத்துக்கு நல்லவர் போல் நடிப்பது தியாகம் ஆகாது.
அவர்களின் எண்ணம் சொல் செயல் அனைத்தும் பொதுநலனை அடிப்படையாய்க் கொண்டதாக இருக்கவேண்டும்.
உண்மையான தியாகிகள் தங்கள் நோக்கம் நிறைவேறுதலையும் அதற்காக உயிர்துறத்தலையும் ஒன்றாகவே கருதுகிறார்கள்.

அத்தகைய உயர்ந்த பண்பாட்டை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்குமளவு அத்தகைய தியாகம் செய்ய வேண்டிய அளவு தீமைகள் சமுதாயத்தில் வளராது.
வாழும் வரையில் தன்னைவிட்டு பிறருக்காக அது நெருங்கிய உறவினரில் இருந்து பொதுவான உலகம் வரை எப்படியாகிலும் நன்மைசெய்து வாழவேண்டும். அதுவே மிக உயர்ந்த வாழ்க்கை நெறியாகும்;.

No comments:
Post a Comment