முருகனுக்குமொட்டை
நான்கு நாட்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் தான் திருச்செந்தூர் போவதாகச் சொன்னார்.
எனக்குக் கூட ஆசை! போய்வந்து நாளாகிவிட்டது. நாமும் அப்படியே ஒரு டூர் அடிக்கலாமா என்று.
எங்கெங்கு போகிறீர்கள் என்று கேட்டதற்கு தீருச்செந்தூர் மட்டும்தான் என்று சொன்னார்.
ஒரு இடம் பார்க்கவா அவ்வளவு தூரம்போகிறீர்கள் என்று கேட்டேன்.
இல்லை மொட்டை அடிக்க வேண்டும் அதனால் என்றார். அதற்கு முப்பது கி மீட்டரில் பழனி இருக்கும்போது முன்னூற்றம்பது கீமீ செல்லவேண்டுமா என்றேன்.
இல்லை திருச்செந்தூர் முருகனுக்குத்தான் வேண்டுதல் என்றார்.
எல்லாப் பக்கங்களிலும் முருகன் ஒன்றுதானே, திருச்செந்தூர் அவ்வளவு தூரம் செலவும் செய்து ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்றேன். அவர் கேட்கவில்லை. அப்படிச் செய்வது தப்பு என்று சொல்லி ஒரே நாளில் தீருச்செந்தூரே போய்விட்டு வந்துவிட்டார்.
பாவம் வாரம் பூராவும் கடுமையான வேலை! ஒரு நாள் ஓய்வில் திருச்செந்தூர்வரை போய்விட்டு வந்து நடமாடுவதற்கே துன்பப் பட்டுக்கொண்டுள்ளார்.
நான் கேட்பதெல்லாம் இவர் பழனிக்குப் போயிருந்தால் முருகன் இங்கு ஏன் வந்தாய்? தீருச்செந்தூர் போ என்று சொல்லி விடுவாரா?
அல்லது திருச்செந்தூரில் உள்ள முருகன் இங்கு ஏன் வரவில்லை என்று வருத்தப்படுவாரா?
தன்னுடைய பக்தன் எவ்வளவு செலவு செய்தாவது எவ்வளவு துன்பத்துக்கு நடுவிலாவது தன்னுடைய கோவில்களில் குறிப்பிட்ட இடத்துக்குத்தான் போகவேண்டும், இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்வாரா?
பார்த்தால் பாவமாக உள்ளது.
இது என்ன ஆன்மிகம்?
அவர்களுக்கு தெரிந்த ஆன்மிகம் இது தான் ... என்ன செய்வது ?
ReplyDeleteநன்றி நண்பரே! அந்த நண்பர் இப்போது அருகில்தான் உள்ளார். உங்கள் கருத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டார்!....
ReplyDelete