விருப்பமும் வெளிப்பாடும்
பெரும்பாலான மக்களின் விருப்பங்களும் எதிர்பார்ப்புக்களும் எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் நியாயத்திற்கு வெகு அருகில் இருக்கும்.
ஆனால் தங்களிடமிருந்து வெளிப்படுவது மட்டும் எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் நியாயத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கும்.
இது தனிமனிதரைமட்டுமல்ல உலக சமுதாயத்தையே பீடித்துள்ள பெரு நோயாகும்.
இதுதான் சமுதாயத்தில் நிலவும் பெருங் கேடுகளுக்கு அடிப்படைக்காரணங்களும் ஆகும்.
இது அநேகமாக வேறு எந்த உயிரினத்திடமும் இல்லாத சிறப்புப் பண்பாகக் கருதுகிறேன்.
இந்தப் பண்பாடு ஒழியுமளவு சமுதாயத் தரம் மேம்படும்.
இல்லாவிட்டால் மனித சமுதாயம் தனக்குத் தானே குழிபறிப்பதைத் தொடர்வதன் மூலம் இறுதியில் மறைந்துவிடும்!
எந்தத் திசையில் பயணத்தைத் தொடரப்போகிறோம்?
No comments:
Post a Comment