கொடுமை! கொடுமை!
இந்தப் படத்தில் உள்ளது நேற்று எங்கள் தோட்டத்தில் எடுக்கப்பட்ட தக்காளிப் பழம்.
ஒரு பெட்டி பதினேழு கிலோ எடை கொண்டது.
ஒரு கிலோ நேற்று மார்க்கெட்டில் விற்றவிலை தொண்ணூறு பைசா.
வாடகை கமிசன்போக கைக்குக் கிடைத்தது ஐம்பது பைசா!
பழம் பறித்த ஆட்கூலி அறுபத்தியைந்து பைசா!
ஆக நேற்று தோட்டத்தில் அறுவடை செய்த தக்காளிப்பழம் ஒரு கிலோவுக்கு அறுவடைக்கே பதினைந்து பைசா நஷ்டம்!
இன்று மீதத்தை அறுவடைசெயாமல் நிலத்திலேயே வீணாக விடச் சொல்லியாயிற்று!
மற்ற முட்டுவளிச் செலவுக்கெல்லாம் ஏக்கருக்குக் குறைந்தது இருபத்தி ஐந்தாயிரம் ஆகும்.
குடியானவன் சாப்பிடணும் மத்தசெலவும் செய்யணும்!
உருப்படுவானா?
ரொம்ப கொடுமை...
ReplyDeleteஅநியாயமா இருக்கு :(
ReplyDeleteஆம் நண்பர்களே! அநியாயமான கொடுமைகள் நடக்கிறது.வருங்கால விவசாயம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது!
ReplyDelete