கடமையும் கத்தரிக்காயும்
தேர்தலில் நிற்கும் மக்களால் கண்டுகொள்ளப்படாத சிலரைத் தவிர
எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள்.
எல்லோரும் பொய் சொல்லுகிறார்கள் .
எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் .
எல்லோரும் வேண்டுமளவு கள்ளச்சாராயமும் நல்ல சாராயமும் வாங்கிக் கொடுக்கிறார்கள்!
எல்லோரும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் பலமடங்கு அதிகமாக செலவு செய்கிறார்கள்.
தாம் வெற்றிபெற்றால் பலவழிகளிலும் மக்களை வஞ்சனை இல்லாமல் கொள்ளையடிக்க அனைவருமே ஆர்வத்துடன் இருக்கிறார்கள்!
எல்லோரும் நன்றிமறக்க வெட்கப்படாதவர்களாக இருக்கிறார்கள்.
மற்ற நாடுகள் காரித்துபும் அளவு நமது நாட்டை ஆக்குகிறோமே என்ற அவமான உணர்வு சிறுதும் அற்றவர்களாக இருக்கிறார்கள்!
அந்நிய வங்கிகளில் கொள்ளையடிக்கும் பணத்தை போட்டுவைப்பதில் போட்டி போடுபவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் மக்களோ நல்லவர் யார் கேட்டவர் யார் என்று தெரிய முயற்சிகூடச் செய்யதவர்களாக இருக்கிறார்கள்!
இந்த நிலையில் இப்படிப்பட்ட பேர்வழிகளுக்கு ஒட்டுப்போடுவதுதான் ஜனநாயகக் கடமை என்றும் ஓட்டுப்போட மறுப்பது குற்றமென்றும் சில அறிவாளிகள் சொல்கிறார்கள்!
நல்லவர்களுக்கு ஒட்டுப்போடவேண்டும் என்றும் சொல்கிறார்கள்!
ஆனால் யார் நல்லவர்கள், யாருக்கு ஒட்டுப்போடவேண்டும் என்று மட்டும் சொல்வதில்லை!
அப்படியானால் யாருக்கு ஓட்டுப்போடுவது?
இதுதான் புனிதக் கடமையும் கத்தரிக்காயுமா?
நல்ல கேள்வி ஐயா...
ReplyDelete