தலைவன்- தொண்டன்
தலைவன் , தொண்டன் என்ற வார்த்தைகளே அருவருப்பானவை ஆகிவிட்டன!
ஒரு இயக்கத்துக்குத் தலைமைதாங்கி வழி நடத்த வேண்டியது அதன் சரியான கொள்கைகளும் கூட்டுத் தலைமையுமாக இருக்கவேண்டும்!
தவறுகளுக்கு வாய்ப்பே இல்லாதபடி மக்களுக்குத் தலைமைதாங்கும் இயக்கம் கட்டமைக்கப்படவேண்டும்!
தவறு செய்யக்கூடாது என்ற உபதேசம் தேவை இல்லை!
தவறு செய்பவன் மன்னிக்கப்படமாட்டான் என்பது உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும்!
அதைத் தவிர்த்து மக்களின் நம்பிக்கையைப் பெற பொய்யான வாக்குறுதிகள் தேவை இல்லை!
அவையெல்லாம் வெறும் செல்லாக் காசுகள் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது!
No comments:
Post a Comment