வலியும் வேதனையும்!
உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அது மனிதனோ, மற்ற உயிரினங்களோ, தாவரமோ துன்புறுத்தும்போது அதற்கு வலியும் வேதனையும் இருக்கும்,
ஆனால் இந்த மூன்றும் அதை வெளிப்படுத்தும் முறைகள் வேறு வேறானது!
மனித உணர்வுக்கு நெருக்கமான துன்ப உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உயிரினங்களின் துன்பத்தைப் பெரிதாக உணர்கிறோம்.
ஆனால் தாவரங்கள் தங்கள் வலியை மனித உணர்வுகளைப் பாதிக்கும் முறையில் வெளிப்படுத்துவதில்லை!
அதனால் தாவரங்களை ஜீவகாருண்ய அடிப்படையில் நாம் பார்ப்பதில்லை!
அது தவிர்க்க முடியாத தேவையாக இருப்பதால் அதை ஒரு கொலைச் செயலாகப் பாவிப்பதும் இல்லை!
சிந்தித்துப் பார்த்தால் தாவர உணவும் நமது உணர்வுகளால் உணரப்படாத ஒரு பாதகச் செயல்தான் என்று சொல்லவேண்டும்.
ஆனால் தவிர்க்க முடியாது!
No comments:
Post a Comment