தாம்பூலம்
இது ஒரு பண்பாட்டுச் சின்னமும் மரியாதைக்கு உரியதும் ஆகும்!
முன்பெல்லாம் குழந்தைகள் தவிர மற்ற எல்லா வயதினரும் அதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சேர்த்து மென்று வாயை மணத்துடன் அழகு படுத்தும் முறைதான் தாம்பூலம் தரிப்பது என்பதாகும்.
அதைமட்டும் போட்டால் வாய் அழகாகவும் மணமாகவும் இருக்கும்!
பற்கள் சற்று சிவப்பாக மாறும். அதுவும் ஒரு அழகுதான்!
நிச்சயம் தலைக்குக் கறுப்புச் சாயம் அடிப்பதுபோல் அது தீங்கு விளைவிப்பது இல்லை!
வெற்றிலை பாக்கு இரண்டும் இயற்கையில் விளைபவை! சுண்ணாம்புச் சத்து உடலுக்கு அவசியமான ஒரு சத்தாக இருப்பதால் தீங்கு விளைவிக்காது!
இவை மூன்றையும் சேர்த்து மெல்லும்போது அழகும் சுவையும் மணமுமாக இருப்பதாலும் தீங்கற்றதாக இருப்பதாலும் நன்மை செய்யக்கூடியதாக இருப்பதாலும் அது ஒரு பண்பாட்டுச் சின்னமாகவே கருதப்படுகிறது!
ஆனால் அதை ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவு இன்று கெடுக்கப்பட்டுவிட்டது!
முதலில் தீங்கற்ற துவர்ப்புச் சுவை கொண்ட பாக்கு வர்த்தக நோக்கத்துக்காக தீங்கானதாக மாற்றப் படுகிறது!
அதன் நிறத்தைக் கவர்ச்சியாகவும் சிவப்பாகவும் மாற்ற ரசாயனப் பொடிகள் கலக்கப்படுகின்றன. அதனால்தான் தீங்கே தவிர இயற்கையான கொட்டைப் பாக்கில் எந்தத் தீங்கும் கிடையாது!
கேரளாவில் வெற்றிலை பாக்கு கேட்டால் கொட்டைப் பாக்கும் அதைச் சீவுவதற்காகக் கத்தியும் கொடுப்பார்கள். அதுதான் தீங்கற்ற சுத்தமான பாக்கு ஆகும்!
அதே சமயம் புகையிலை மண்ணில் இயற்கையில் விளையும் தாவரம் என்றாலும் அது மனிதன் உண்ணக்கூடிய தாவரம் அல்ல! நச்சுத் தன்மை உடையது!
அதனால்தான் புகையிலைச் சாற்றை விழுங்க முடியாது!
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மட்டும் போட்டால் அதன் சாற்றை விழுங்க முடியும். விழுங்க வேண்டும். அதுதான் நல்லது!
ஆனால் தாம்பூலத்துடன் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் புகையிலையையும் சேர்த்துப் போட்டு அதன் சுவையையும் பயனையும் நாசமாக்கி விட்டார்கள்.
ஒரு கெட்ட பழக்கமாகப் புற்றுநோய் உண்டுபண்ணக் கூடிய கொடிய புகையிலையை போடுவதல்லாமல் கண்ட இடங்களில் எல்லாம் துப்பி அருவருப்பான செயலாக மாற்றி விட்டார்கள்!
அது தவறு! தனியாகச் சுத்தமான கொட்டைப் பாக்கு சேர்ந்த தாம்பூலம் போடுவது அழகானதும் சுவையானதும் பயன்மிக்கதும் ஆன நல்ல பழக்கம் ஆகும்!
அதை எங்கும் துப்பி அசிங்கப்படுத்த அவசியம் இல்லை!
எனவே நல்ல தாம்பூலம் போடுவதை மதிப்போம்!
புகையிலைப் பழக்கத்தை எந்த வடிவிலும் ஒழிப்போம்!
No comments:
Post a Comment