மாயமான மாயன்!
எப்படியோ மாயன் சொன்ன ஆபத்து நழுவிப் போய் விட்டது!
தப்பிப் பிழைத்துவிட்டோம்!
இப்போ என்ன கிளம்புகிறது என்றால் உலகம் அழியும் என்ற அபத்தத்துக்கு மாற்றாக வேறொன்றை முன்வைக்கிறார்கள்!
ஆதாவது டிசம்பர் இருபத்தியொன்று உலகம் அழியும் நாள் அல்லவாம்! அவர்களின் காலண்டர் முடிவு நாளாம்!
இனிப் புதுக் காலண்டர் துவங்குகிறதாம்!
யார் புதுக் காலண்டரை எழுதி வெளியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை!
இதற்குள் வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை........
மாயன்கள் என்ற ஒரு நாகரிகம் இருந்துள்ளது. அது சம்பந்த,மான தொல்பொருட்கள் நிறையக் கிடைத்துள்ளன. அது தொடர்பான செய்திகளின் உண்மையான விபரங்களை அறிய முடியாமல் வியக்கிறோம் . அவ்வளவே!
அதற்குமேல் அது பற்றிய கற்பனைகளையெல்லாம் நம்புவது அறிவுடைமை அல்ல! அது காலண்டரும் அல்ல ஒரு புண்ணாக்கும் அல்ல!
லீப் வருடத்தைப் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை!
முன்னூற்றி அறுபத்தி ஐந்தேகால் நாட்கள் கொண்டது ஒரு வருடம் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்களா?
அப்படியானால் சுமார் எண்ணூறு நாட்கள் வித்தியாசம் வரும். இதை ஏன் எவரும் நினைக்கவில்லை?
உலக முடிவை பற்றி எழுதிய மாயன் காலண்டர் ஏன் உலகம் எப்போது தோன்றியது என்று சொல்ல வில்லை.?
தேதி வாரியான மற்ற விபரங்கள் எங்கே?
உலகம் தோன்றியதைச் சொல்லவேண்டாம்.....இதுநாள் வரை வேறு எந்த நாளைப் பற்றி அதில் இருந்தது?
காலண்டர் என்று சொன்னால் தினசரி நிகழ்வுகள் பற்றி சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
அப்படி ஒரு நாளைப் பற்றியும் சொல்லாத அது எப்படி காலண்டர் ஆச்சு?
எல்லாம் மக்களை முட்டாளடிக்கும் உபாயங்கள்!
உலக மக்கள் விழிப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஏதாவது காரணங்களைச் சொல்லி அறிவை முடமாக்க முயல்வது வழக்கமான ஒன்று.
ஆனால் அதில் வெற்றியும் கிடைக்கிறது!
No comments:
Post a Comment