சூழ்நிலை
அண்டத்தில் உள்ள அனைத்தையும் தீர்மானிப்பவை சூழ்நிலைகளே!
நாம் சூழ்நிலைக் கைதிகள் அல்ல! சூழ்நிலைகளின் ஓர் அங்கம!
காரணம் இன்றிக் காரியம் இல்லை என்பது மிகப் பெரிய தத்துவம் !
அந்தக் காரணங்கள்தான் சூழ்நிலைகள்!
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் காரணங்கள் காரியங்களாகவும் காரியங்கள் வேறொன்றுக்கோ பலவற்றுக்கோ காரணங்களாகவும் மாறியபடி இருப்பதே உயிருள்ள உயிரற்ற அனைத்தின் வாழ்வு முறை ஆகும்.
இதற்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல!
ஆகையால் சரியான காரணமாகவும் சரியான காரியமாகவும் நமது வாழ்க்கைப் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வதே நம்முன் உள்ள மற்றும் நமக்கு அனுமதிக்கப்பட்ட கடமை ஆகும்!
No comments:
Post a Comment