அஹிம்சை!
இந்தியாவில் அஹிம்சை என்பது பாவப்பட்ட மக்களை நிராயுதபாணிகள்
ஆக்குவதும் அவர்களின் துன்பங்களுக்குக் காரணமானவர்களை ஆயுதபாணிகளாக நீடிக்கச் செய்வதுமான
ஏமாற்றுத் தத்துவம் ஆகும்!
அது இந்திய மக்களின் வாழ்வைச் சூரையாடிக்கொண்டிருப்பதைவிட கொள்ளையர்களை வளர்த்துவிட்டதைத் தவிர வேறொன்றையும் சாதிக்கவில்லை!
உடனடியாக ஏதேனும் செய்ய விரும்பினால் இந்த அகிம்சை என்ற பெயரால்
வழக்கத்தில் உள்ள அக்கிரமத்தைத் தூக்கிக் குப்பையில் எறிய வேண்டும்!
தவறுகளை எதிர்த்து ஈவிரக்கமற்ற போராட்டங்கள் நடக்கவேண்டும்!
அகிம்சை என்பது மக்கள் ஒருவருக்கொருவர் கடைப்பிடிக்கவேண்டிய
உயர்ந்த உண்மையான பண்பாக மலரவேண்டும்!
சைத்தான்கள் ஓதும் வேதமாக இருக்கக்கூடாது!
No comments:
Post a Comment