தேசபக்தர்கள் தேச ஒற்றுமையை எவ்வளவுதான் விரும்பினாலும் பிரச்சினைகளை இழுத்தடிப்பதன்மூலமும் பிரித்தாழும் சூழ்ச்சியில் வெள்ளையர்களைவிடக் கெட்டிக்காரர்களாக இருப்பதன் மூலமும்; மத்தியில் ஆள்பவர்கள் பிரிவினைத் தீயில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள்!
http://www.facebook.com/photo.php?fbid=246113268789693&set=pb.100001730669125.-2207520000.1366797305.&type=3&theater
================================================================
வெள்ளையனுக்கு அடிமைகளாக இருந்தபோது இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு அணையைத் திட்டமிட்டுக் கட்டி நூறாண்டுகளுக்கும் மேலாகப் பயன்பெறவும் முடிந்தது.
ஆனால் விடுதலைபெற்றபின் ஒரு சுதந்திர நாட்டில் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு அந்த அணையைக் காப்பாற்ற முடியாமல் அக்கப்போர் செய்து கொண்டுள்ளோம்.
அப்படியானால் நாம் அடிமைகளாக இருக்கத்தான் தகுதி பெற்றவர்களா? வெட்கப்படவேண்டிய விஷயம்!
http://www.facebook.com/photo.php?fbid=248614811872872&set=pb.100001730669125.-2207520000.1366797305.&type=3&theater
================================================================
Subash Krishnasamy
December 14, 2011
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் தவறையும் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதும் ஜனநாயக உணர்வு மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் மேலோங்கவேண்டும் அப்போது உருவாகும் எழுச்சிதான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும் அப்போது உருவாகும் அரசுகள்தான் மக்களின் அரசுகளாக மக்களின் தேவைகளைக் கவனிக்கும்!
http://www.facebook.com/photo.php?fbid=251273538273666&set=pb.100001730669125.-2207520000.1366797305.&type=3&theater
===================================================================
Subash Krishnasamy
December 15, 2011
தன்னைவிட வலியவர்கள் தன்னை சமமாக மதிக்கவில்லையே என்று வருத்தப்படும் அதேநேரம் தன்னிலும் எளியவரைத் தனக்குச் சமமாக மதிக்கத் தயங்குவதோ மறுப்பதோ என்ன நியாயம்? ஆனால் எளியவர் முதல் செல்வந்தர் வரை அனைவரையும் இந்தக் குணம் நோயாய்ப் பற்றியுள்ளது.
http://www.facebook.com/photo.php?fbid=251934994874187&set=pb.100001730669125.-2207520000.1366797305.&type=3&theater
=======================================================================
Subash Krishnasamy
December 16, 2011
விமர்சனம் என்பது பூனை எலியைக் கவ்விச் செல்வதுபோல் தீங்கு விளைவிப்பதாக இருக்கக்கூடாது. பூனை அதே பற்களால் தான் குட்டியைக் கவ்விச் செல்வதுபோல் மென்மையாக இருக்க வேண்டும்!
http://www.facebook.com/photo.php?fbid=252523784815308&set=pb.100001730669125.-2207520000.1366797305.&type=3&theater
No comments:
Post a Comment