ஈ வே ரா
ஈ வே ரா நாத்திகராக இருந்தாலும் அவருடைய தாக்குதல்கள் பெரும்பாலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவே இருந்தன!
அடிப்படை ஆன்மிகத்தை அவர் நிந்தனை செய்ததாகத் தெரிய வில்லை!
அதனால் அவரை ஆன்மிகத்தின் எதிரியாகப் பார்க்காமல் மூட நம்பிக்கைகளின் எதிரியாகத்தான் பார்க்கவேண்டும்!
அவரே மறுத்தாலும் அவருடைய கருத்துக்கள் உண்மையான ஆன்மிகத்துக்கு நெருக்கமானவை!
ஆனால் அரசியல் அடிப்படை பலவீனமாக இருந்ததால் அவருடைய பெயரைச் சொல்லி மக்களை ஏய்த்துப் பிழைத்தவர்களால் அவருடைய வழித் தோன்றல்களாக ஆக முடிந்தது!
தீண்டாமை , சாதிக்கொடுமைகள் எதிர்ப்பு, பெண்விடுதலை போன்ற சீர்த்திருத்தக் கருத்துக்கள் பாராட்டத்தக்கவை!
அதே சமயம் பிறப்பில் கோளாறு இருந்தால் ஒழிய ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன் நல்லவனாக இருக்கமுடியாது போன்றவை மூட நம்பிக்கைகளுக்கு இணையானவை! அதை நான் நிராகரிக்கிறேன்!
/// அவரே மறுத்தாலும் அவருடைய கருத்துக்கள் உண்மையான ஆன்மிகத்துக்கு நெருக்கமானவை! ///
ReplyDeleteஉண்மை...
அவரே மறுத்தாலும் அவருடைய கருத்துக்கள் உண்மையான ஆன்மிகத்துக்கு நெருக்கமானவை!
ReplyDeleteஎவ்வாறு அவருடைய கருத்துக்கள் உண்மையான ஆன்மிகத்துக்கு நெருக்காமானவை என்பதை உங்கள் இணையத்தில் விளக்கினால் மிகவும் பயனாக இருக்கும். விளக்கத்தை எதிர்பார்த்து...