மக்களாட்சித் தத்துவம்!
===================
நமது நாட்டில் நிலவுவது மக்களாட்சி என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பதே சரியானதல்ல. மக்களாட்சி என்ற பெயரால் எமாற்றப்பட்டுக்கொண்டிருக்க ிறோம் என்பதே உண்மை!
மக்களின் பிரதிநிதிகளாக வசதியானவர்கள்மட்டும் வரமுடியும் , தேசபக்தி, நேர்மை தியாக உணர்வு போன்றவையெல்லாம் முக்கியமானவை அல்ல என்ற நிலையை அனுமதிக்கும் தேர்தல் முறையை மக்களாட்சித் தத்துவம் என்பதே மோசடியாகும்.
சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொண்டே அந்த சட்டம் சிலருக்குப் பயன்படவும் பலரை நசுக்கவும் பயன்பட அனுமதிக்கும் ஆட்சிமுறை ஜனநாயகம் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?
தேர்தலில் நிற்கும் சிலரைத் தவிர மற்றவர்களில் பெரும்பாலோர் மக்கள் நலனுக்கு எதிரானவர்களாக இருந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்கு ஒட்டுப்போட்டுவிட்டு அவர்களின் தீயகுணங்களுக்குத் துணைபோனவர்களாக வாழ்வதுதான் மக்களின் ஜனநாயக்கடமை என்றால் அதைத் தூக்கிக் குப்பையில் எறிவதுதான் சரியான கடமையாக இருக்கும்!
இப்போது நடைமுறையில் உள்ளஅசிங்கத்தை ஜனநாயகம் என்று கர்ப்பிக்கப்பட்டிருகிறது? தேர்தலில் நிற்பவனுக்குத்தானே ஒட்டுப்போடமுடியும்? நல்லவர்கள்தான் நிற்க முடியும் என்று ஏதாவது வடிகட்டும் முறை இருக்கிறதா? நீங்கள் அப்பழுக்கற்ற தேசபக்தர். நாட்டுக்காக உழைக்க உண்மையாலுமே நினைக்கிறீர்கள். எல்லாத் தகுதியும் இருக்கிறது. உங்களால் புகழ்பெற்ற ஒரு பொறுக்கியை ஜெயிக்க முடியுமா? முதலில் தேர்தலில் நிற்க தேவையான கோடிகள் உங்களிடம் உள்ளதா?
ஆனால் மக்களாட்சியில் மக்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கும் அடிப்படை ஜனநாயகத்தைப் பற்றியும் மக்களின் கடமைகள் பற்றியும் அவர்களால் தேர்வுசெயயப்படும் அவர்களின் பிரதிநிதிகளின் கடமைகள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும். அவ்வாறெல்லாம் இல்லாமல் வாக்குரிமையின் அருமை தெரியாத மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், தமது கடமைகள் என்னவென்றே தெரியாத அல்லது கவலைப்படாத நபர்கள் ஆளும் ஆட்சியை மக்களாட்சி என்று கூறுவது ஒன்று அறியாமை, மற்றது மோசடி!
அறியாமைக்குச் சொந்தக்காரர்கள் பெரும்பாலான மக்கள். மோசடிக்குச் சொந்தக்காரர்கள் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் அவர்களின் தயவில் வாழும் சுயநலவாதிகளும்.
இந்தநிலமையை ஒழித்துக்கட்டி உண்மையான மக்களாட்சி அமைய வேண்டுமா வேண்டாமா என்பதுதான் முக்கியம்!
===================
நமது நாட்டில் நிலவுவது மக்களாட்சி என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பதே சரியானதல்ல. மக்களாட்சி என்ற பெயரால் எமாற்றப்பட்டுக்கொண்டிருக்க

No comments:
Post a Comment