நூறுநாள் வேலையும் விவசாயமும்.
இப்போது விவசாயிகளுக்கு எதிரான போராகத்தான் அரசின் நூறுநாள் வேலைத் திட்டம் பயன்படுகிறது!....
விவசாயத்தைச் சீர்குலைக்கவும் உழைக்கும் மக்களைச் சோம்பேறி களாக்கவுமே இந்தத் திட்டம் பயன்படுகிறது!
நூறு நாள் வேலைத் திட்டம் என்பது மாற்றி யமைக்கப்படவேண்டும்!
ஆதாவது விவசாய வேலைகள் இல்லாதநாட்களில் நிவாரணமாக கொடுக்கப்படவேண்டும்.
அதன்மூலம் விவசாய வேலைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் நூறுநாள் வேலையின் வேலைப் பளு அதிகமாகவும் ஊதியம் குறைவாகவும் இருக்கவேண்டும்.
நிவாரணமாகக் கொடுப்பது விவசாயிகளுக்குப் போட்டியாகப் பயன்படக் கூடாது!
அப்போதுதான் விவசாய வேலை இருக்கும்போது அதற்குப் போக மாட்டார்கள்....
அதை விட்டு இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் மக்களின் தகுதி இப்போது உள்ளதைவிடக் கேடுகேட்டுப் போகும்!
அரசுப் பணத்தில் எழைமக்களுக்குக் கொடுக்கும் லஞ்சமாகவே கருதப்படும்.
அது நல்லதல்ல!
நாடு என்றென்றும் சீரழிவில் இருந்து மீள முடியாது!
கவனிப்பார்களா?....
ஒரு யோசனை!...
நூறுநாள் வேலைக்காக ஊர் வாரியாக ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு வேலைகளும் நிர்ணயிக்கப்படலாம்.
ஆனால் விவசாய வேலைகளுக்கு இணையான வேலைப் பளுவும் கொஞ்சம் குறைவான ஊதியமும் நிர்ணயிக்கப்படவேண்டும்.
விவசாய வேலைகள் இல்லாத நாட்களில் மட்டும் நூறுநாள் பணிக்கு வருவார்கள்.
விவசாய வேலை இருந்தால் அதற்குப் போவார்கள்.
அதே நேரம் வரட்சிக் காலங்களில் மட்டும் விவசாயிகளுக்குத் தேவைப் பட்டால் சலுகை ஊதியத்துக்கு நூறுநாள் வேலைத் திட்ட அலுவலகத்தில் இருந்தே ஆட்களை அனுப்பலாம்.
அதன் காரணமாக விவசாயி அவசரம் அல்லாத வேலைகளைக்கூட செய்வதற்கு ஊக்குவிப்பாக அமையும்!
இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இருக்காது!
நடக்கும் வேலைகள் மிகவும் நேர்மையாக நடக்க வாய்ப்பு உள்ளது!
இதை ஏன் செய்யக்கூடாது?....

ReplyDeleteவிவசாயிகளுக்கு எதிரான போராகத்தான் அரசின் நூறுநாள் வேலைத் திட்டம் பயன்படுகிறது!. – இது உண்மை.
என்ன செய்யலாம்?
ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் தனக்கு வேலைக்குத் தேவையான வேலை ஆட்களை தேவைக்கு முன்தினம், கிராமத்தில் 100 நாள் அரசு அதிகாரிக்கு தெறிவிக்கவேண்டும். அவர் தேவையான நபர்களை விவசாய்களுக்கு நேரிடையாக அனுப்பவேண்டும்.
இப்படி அனுப்பும்போது அரசு ரூபாய் 50 கொடுத்தால் போதும். விவசாயி ரூபாய் 100 கொடுக்கவேண்டும். இப்படி செய்வதால் வேலை செய்பவர்களுக்கு அதிக லாபமும் விவசாயம் பெறுகவும் செய்யும்.
இதை எப்படி முறைப்படுத்தவேண்டும் என்பதற்கு வழி உண்டு.
பூனைக்கு மனி கட்டுவது யார்?
பூனக்கு பால் இல்லாமல் போகுமே?
பூனை யார்?