ss

Saturday, April 13, 2013

பிற உயிரினங்கள் ( 6 )

உரையாடல்......

(உயிர்வதையும் மாமிச உணவையும் பற்றியது )

நண்பர்: சிங்கமும் புலியும் நரியும் ஓநாயும் மனிதர்களை தினமும் வகை வகையாய் அடித்து ருசித்துச் சாப்பிட்டால் அப்போது அந்த மனிதக் கொலையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

நான்: அப்படி ஒரு நிலை இருந்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது முக்கியமாக இருக்காது நண்பரே! இப்போதும் மனித அழிவுகளைப் பற்றி எந்த உயிரினமும் கவலைப்படுவதில்லை! அதுமட்டுமல்ல! நுண்ணுயிர் இனங்களால் தினசரி கொல்லப்படும் மனிதர்கள் ஏராளம்! சிங்கம் புலியால் மனிதனை பெரும்பாலும் வேட்டையாட முடிவதில்லை! அவற்றைவிடப் பலமடங்கு கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள் மனித வேட்டை நடத்திக்கொண்டுள்ளன. அதுவும் தவிர்க்க முடியாததே!

நண்பர்:  இதுதான் மாமிசம் சாப்பிடுவதற்கான காரணம் என்று நீங்கள் நியாயப்படுத்திக் கொண்டால், பிறகு மிருக வதை பற்றி மட்டும் ஏன் தவறு என்று இங்கே எல்லோரும் புலம்ப வேண்டும்? 

நான்:இதில் எந்த முரண்பாடும் இல்லை நண்பரே! மற்ற உயிரினங்கள் வாழும்வரை அவற்றை வதைக்கக்கூடாது என்பதை ஒட்டித்தான் வதைப்பவர்கள் பற்றிய வருத்தங்கள்!மாமிசம் உண்ணாதவர்கள் மாமிசம் உண்ணாததுதவிர உண்பவர்களைவிட எவ்வகையில் மேம்பட்டவர்கள் என்று சொல்ல முடியுமா?..

நண்பர்: வாழ்ந்து கொண்டிருப்பதைக் கொல்வதை விட பெரிய வதை ஏதாவது உண்டா? உங்களின் விளக்கம் பொருத்தமானதாக இல்லை சுபாஷ் அவர்களே!! நீங்கள் சொல்கிறபடி வதைக்காமல் கொள்வது நல்ல செயல் என்கிற மாதிரி இருக்கிறதே!

நான்: நிச்சயம் இல்லை நண்பரே! இரக்க குணத்தில் நீங்கள் மதிக்கும் முதல் மனிதனாக நான் இருப்பேன்.... மனிதனால் கொல்லப்படும் உயிரினங்களைக் காப்பாற்ற எந்த வழியும் இல்லாத நிலையில் அதைத் தவிர்க்க முடியாமல் போகிறது என்றுதான் நான் சொல்கிறேன்....

நண்பர்: உண்பவர்கள் இருப்பதால் தான் கொல்கிறார்கள்.

நான்: அதைத்தான் தவிர்க்க முடியாது என்கிறேன் நண்பரே! அப்படி உண்ணாதவர்கள் ஏன் கொல்பவனுக்கு கொல்வதற்காக விற்பனை செய்கிறார்கள் என்பது தான் கேள்வி! அது தவிர்க்கக்கூடியதாக இருந்தால் மாமிசம் உண்ணாதவர்கள் கொல்வதற்காக கால்நடைகளை விற்பார்களா?....

நான் வாதத்துக்காக எப்போதும் பேசுவது இல்லை நண்பரே! கற்றுக்கொள்ளவே உரையாடுவேன்....ஆனால் அது நடைமுறை சாத்தியமான நெறிகளின் படி இருக்கவேண்டும் என்பதே! சாத்தியமில்லாத வழிகளைச் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள்?....

நண்பர்: சரி, நீங்கள் முதலில் சைவம் சாப்பிடுகிறவரா இல்லையா என்பதைச் சொல்ல இயலுமா? நீங்கள் மனவளக்கலை ஏதும் கற்றீர்களா? பதில் சொல்ல ஆட்சேபனை இல்லையென்றால் இயம்பவும்.

நான்: நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை வைத்து சமூகத்தின் நியாயங்களை முடிவு செய்யக்கூடாது நண்பரே! நான் மது அருந்துவது இல்லை! அதற்காக மதுப் பழக்கம் உள்ள அனைவரையும் குடிகாரப் பயல்கள் என்று ஏசமாட்டேன்!....

நான்:  "தவிர்க்கக்கூடியதாக இருந்தால் மாமிசம் உண்ணாதவர்கள் கொல்வதற்காக கால்நடைகளை விற்பார்களா?...." என்ற கேள்விக்கு ஏன் பதில் சொல்ல விலை? இங்கு பொருளே அதுதானே?....

நண்பர்: என்ன செய்கிறோம் என்று புரியாமல்தான். (என்று) முதலிலேயே சொல்லிவிட்டேன் (answer)
=============

 நண்பர்: மறுபடியும் ஆரம்பிக்கிறேன். புலால் உண்ணாமை நற்பண்புகளில் ஒன்றா இல்லையா?

நான்: நிச்சயம் புலால் என்பது மனிதனுக்கான உணவே அல்ல! அது பழக்கத்தாலும் ஒருகாலத்தில் தவிர்க்கயலாத நிலையிலும் வந்தது! இன்றும் அதன் சமைப்பதால் உருவாக்கும் சுவைக்காகத் தான் உண்கிறார்கள். உடல்நலத்துக்கும் மாறானதே! அதனால்தான் நமது குழுமத்தில் புலால் உணவு பற்றிய பதிவுகள் தடை செய்யப்பட்டுள்ளது!.....அதனால் புலால் மறுப்பு என்பது நிச்சயம் உயர் பண்பே!....

நண்பர்:  "புலால் உணவு ருசியானது" என்பது பொருந்தாது. ஏனென்றால் அந்த உணவுக்கு சுவையூட்டுவது அதில் சேர்க்கப்படுகின்ற "சைவ மசாலக்களே

நான்:\சமைப்பதால் உருவாக்கும் சுவைக்காகத் தான் உண்கிறார்கள். என்று நான் சொல்லியிருப்பதால் உங்கள் பதில் பொருளற்றதாகிறது!..

நண்பர்: புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.

நான்:அதேசமயம் கொல்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதால்தான் அவர்கள் விலைக்கு வாங்கிக் கொல்லும் தொழிலைச் செய்கிறார்கள் என்பதை ஏன் நீங்கள் நினைக்கவில்லை?...

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.கொல்பவர்களும் உண்பவர்களும் ஒவொரு காரணத்துக்காக அதைச் செய்கிறார்கள். அதைத் தவிர்க்கும் நல்ல மாற்று வழியை அவர்களுக்குக் காட்டாதவரை போலிக் கொல்லாமை என்கிற உபதேசம் அவர்களிடம் எடுபடாது!....

புலால் உண்ணாமை என்பதை மட்டும் ஒரு மனிதரின் பண்பைத் தீர்மானிக்கும் அம்சமாகக் கொள்ள முடியாது! வேறு பல நல்ல அம்சங்களும் அதைத் தீர்மானிக்கின்றன!.

உண்பவன் கொல்லாதவனும் இருக்கிறான். கொல்பவன் உண்ணாதவனும் இருக்கிறான்! இதில் யார் மேலானவன்?....

நண்பர்: இருவருமே தெரிந்தோ தெரியாமாலோ தவறு செய்பவர்கள்தான். யாரும் மேலானவர்கள் இல்லை. இவர்களுக்கும் விளக்கிச் சொன்னால் தொழிலை மாற்ற்க்கொள்வார்கள்.

நான்: \இருவருமே தெரியாமல் தவறு செய்பவர்களாக இருக்கும்போது, ஆதாவது கொல்லுதலுக்குக் காரணமாக விளங்கும்போது, அதில் கொல்கின்ற உண்ணாதவன் மட்டும் எப்படி கொல்லாமல் உண்பவனை விட மேலானவன்?....

வெறொரு நண்பர்: அய்யா...அந்த நல்ல மாற்று வழிதான் என்ன...?

நான்: அதைத்தான் நானும் கேட்கிறேன் ! அதைச் சொல்லாமல் மாமிசம் உண்பதுதான் அத்தனைக்கும் காரணம் என்றால் மாமிசம் உண்ணும் மிகப் பெரும்பாலான மக்களை , மாமிசம் உண்ணாமல் கொல்லும்தொழிலை மட்டும் செய்யும் மக்களை எப்படி மாற்ற முடியும்?

நான் தவிர்க்க இயலாத வாழ்க்கைமுறையாகிவிட்டது என்று சொல்கிறேன்....அதைத் தவிர்ப்பதன் ஒரு நிலைதான் இயற்கை உணவுக் கோட்பாடும் அதுபற்றிய விழிப்புணர்வு ஊட்டலும்.

நம்மால் செய்யக்கூடியது அதுவே! அதைவிட சிறந்த வழி தெரிந்தவர்கள்தான் சொல்லவேண்டும் !....

நண்பர்: சைவ உணவு சாப்பிடுங்கள். விவசாயத் தொழிலை வளருங்கள். மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். வழியைச் சொன்னபிறகும் மாமிசம் சாப்பிடுவது விட முடியாதாது என்கிற பாணியிலேயே கருத்துக்களும் கேள்விகளும் புரிந்தவர்களே கேட்டுக் கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்?

நான்: நண்பரே! இது நம்மைப் பற்றிய உரையாடல் அல்ல! சமூகத்தில் நிலவும் முரண்பட்ட நிலைமைகளை எப்படி எதிர்கொள்வது என்பதுதான்!

ஞாயிறு கண்டகண்ட உணவுகளை உண்டுவிட்டு ஏப்பம் விடுபவன் விட்டுக்கொண்டிருக்க பழைய சோற்றையும் ஒன்றிரண்டு பழங்களையும் உண்டுவிட்டு நான் பேசிக்கொண்டு உள்ளேன்....

காரணம் உயர்ந்த உங்கள் நோக்கத்துக்கு எவ்வகையிலும் குறையாத உணர்வு இருப்பதால்தான்! இப்போது உள்ள நிலையில் அந்த உணர்வும் அதன் வழியில் நடக்கும் உணர்வும் இருப்பதால்தானே இவ்வளவு சிறப்பான ஒரு குழுவை உருவாக்கினேன்.நாம் உரையாடிக்கொண்டுள்ளோம்.

ஒவ்வொரு அசைவிலும் கருணையை வெளிப்படுத்தும் வாழ்வை வாழ்வதைவிட என்ன செய்துவிட முடியும்?....

நண்பர்: வழி என்ன என்று சொன்ன பிறகும். வேறு என்ன புது வழி எதிர் பார்க்கின்றீர்கள்?\\\\\\

நான்: மாமிசம் உண்பவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியானதும் கொல்லப்படும் கால்நடைகளைக் கொல்லாமல் தடுக்ககூடியதாகவும் ஆன நம்பகமான வழிகளைச் சொல்லாமல் உண்பதை நிறுத்தினால் கொல்வது நிற்கும் என்று சொல்வதுமட்டும் போதுமானது அல்ல!


மாமிசம் உண்பவர்கள் அனைவரும் கொல்பவர்கள் அல்ல!

ஆனால் கொல்பவர்களில் பெரும்பாலோர் மாமிசம் உண்பவர்களாக இருப்பர்!

இதில் உண்மையான விஷயம் என்னவென்றால் கொல்வதற்காக குறிப்பாக மாடுகளை விற்பவர்களில் மிகப் பெரும்பாலோர் மாட்டு மாமிசம் உண்ணாதவர்களே!

உண்பவர்கள் வாங்கி உண்பதில் அர்த்தம் இருக்கிறது!

ஆனால் உண்ணாதவர்கள் அடுத்தவர்களுக்குக் கொல்லவும் உண்ணவும் விற்கிறார்களே அதைத்தானே முதலில் தடுக்க வேண்டும்.

உண்ணதவர்களே கொல்வதற்குக் காரணமாக இருக்கும்போது உண்பவர்கள் எப்படி முதல் குற்றவாளிகள் என்கிறீர்கள் என்பதுதான் முதன்மையான கேள்வி?

அவர்களைத் தடுக்கும் வழியைச் சொல்லுங்கள்!


(தொடரும்) 
2 comments: