ஆடையும் மனிதனும்...
நண்பர்களே
மனிதன் வெப்பம், குளிர், மற்ற இயற்கைத் தாக்குதலிலிருந்து தப்பித்தல் போன்ற பவுதிகத் தேவைகளுக்காக மட்டும் ஆடை அணியவில்லை!
அந்தத் தேவை அத்தனை உயிரினங்களுக்கும் உண்டு.
அதற்கு அப்பால் மனோரீதியாகவும் மனிதனுக்கு ஆடை அணியும் அவசியம் ஏற்ப்பட்டது!
மற்ற உயிரினங்கள் சராசரி அறிவுடன் இருப்பதால் அவைகளின் பாலுணர்வு உடல் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருந்தது.
ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சி காரணமாகச் சிந்திக்கும் திறன் பெறுகிறான்.
அதனால் பாலுணர்வை அவ்வப்போது பகிர்ந்துகொள்வதுடன் நிற்கவில்லை!
அதைப் பற்றி அடிக்கடி எண்ணிப் பார்ப்பவனாகவும் அந்த அனுபவம் பற்றி நினைத்து மகிழ்பவனாகவும் அதை அடையும் வழிபற்றி சிந்திப்பவனாகவும் மாறுகிறான்.
அதைத் தொடர்ந்து மற்ற உயிரினங்களைவிடத் தேவை இல்லாத காலத்திலும் பாலுணர்வு மேலோங்குவதும் அதற்காக விரும்புவதும் முயற்சிப்பதும் நடக்கிறது.
ஆனால் ஒரே நேரத்தில் அத்தனைபேருக்கும் அந்த உணர்வு ஏற்படுவது இல்லை!
அதனால் ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும்போது பாலுணர்வைப் பிரயோகம் செய்யவும் விருப்பம் இல்லாத பொது தவிர்க்கவும் அவசியம் ஏற்பட்டது.
அதன் முதல்படியாகப் பாலுணர்வைத் தூண்டும் அங்க அவயங்களை மறைப்பதன்மூலம் தங்கள் விருப்பம் இன்றி மற்றவர்களின் பாலுணர்வைத் தூண்டாதபடி செய்யும் அவசியம் ஏற்ப்பட்டது!
அதுதான் ஆடையணியும் பழக்கத்தின் துவக்கம்.....
No comments:
Post a Comment