ஆன்மிகத்துக்கு அநீதி!
மதநம்பிக்கை உடையவர்களும் மதப்பற்று உடையவர்களும் அவர்கள் எந்த மதத்தைச் சோர்ந்தவர்களாக இருந்தாலும் தங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்களைக்கூட அத்தனை பேரையும் மனதார நேசிப்பதில்லை.
ஆனால் மதநம்பிக்கை இல்லாதவர்களும் மதப்பற்று இல்லாதவர்களும் அனைத்து மதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் மனதார நேசிக்கிறார்கள்.
ஆனால் அவர்களை எந்த மதத்தவரும் தங்களுக்கு நெருங்கியவர்களாகப் பாவித்து நேசிப்பது இல்லை.
மாறாக ஆன்மிகத்தின் எதிரிகளாகப் பாவித்து வெறுக்கிறார்கள்.
ஆதாவது நேசிக்கப்பட வேண்டியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இது கொடுமையிலும் கொடுமையல்லவா!
மதமும் மூடநம்பிக்கைகளும் இல்லாமல் ஆன்மிக வாழ்வு மட்டும் வாழ்வது அவ்வளவு இழிவானதா?...
மக்கள் மனம் மாறவேண்டும்!
---------------------------------------------
இது தொடர்பான எனது கூடுதல் கருத்துக்கள்:
கேள்வி: மதம் என்பது மூட நம்பிக்கை போல எழுதியிருக்கிறிர்கள் ஐயா !
பதில்: ஆன்மிகம் அனைத்து மக்களுக்கும் வழிகாட்டும் அம்சமாக விளங்கவேண்டும் நண்பரே!
ஆனால் மதங்கள் மூடநம்பிக்கைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் உயர்ந்த ஆன்மிக சிந்தனைகளுக்குக் கொடுத்திருந்தால் இன்று உலகம் வேறு விதமாக இருந்திருக்கும்!
நம்மைப் போன்ற நல்லுணர்வு கொண்டோரையும் பிரித்து வைத்திருக்கிறது பாருங்கள்! அதுதான் அதன் பலம்!...
கேள்வி : ஐயா, நான் கூறியது ஆன்மீகத்தின் பிரிவு அல்லது அடையாளம் மதம் இதில் உங்கள் கருத்து என்ன?அதாவது ஆன்மீகம் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? பிறகு உயர்ந்த ஆன்மீகம் என்பது பற்றி பர்ப்போம்
பதில் : ஆன்மிகம் என்பது அனைத்து மக்களுக்குமானது!
மதங்கள் அனைத்து மக்களுக்கானது அல்ல!
அதனால் அவற்றை ஆன்மிகம் என்று நான் நினைப்பதில்லை!
உயர்ந்த ஆன்மிகம் என்பது மதங்களையும் மூட நம்பிக்கைகளையும் புறக்கணித்து அனைத்து மக்களையும் அன்பால் அரவணைத்துச் செல்லும் நெறிகளை தர்மங்களாகக்கொண்ட து!
கேள்வி : ஆன்மீகத்தை அடிப்படையாகக்கொண்டே மதங்கள் தோன்றின. இங்கு மூட பழக்கவழக்கங்களோ அல்லது வேண்டப்படாத சமூக சீர்கேட்டு பண்பாட்டு முறைகளோ இருந்தால் அவற்றை ஒதிக்கி வைத்து உலகில் உள்ள அனைத்து மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் ஆராய்ந்தால் உயர்ந்த ஆன்மீக கோட்பாடுகளை மையப்படுத்தியே கூறப்பட்டிருக்கும்.
ஆனால் மக்கள் அதை சரியாகப் புரிந்து கொண்டு கையாள வில்லை.
பழக்கத்தால் ஏற்பட்ட வேண்டப்படாத மூட பழக்க வழக்கங்கள் ஆன்மீகப்பாதையிலிருந்து,மததின் கோட்பாடுகளிலிருந்து மக்களைப் பிறழச் செய்து விட்டன.
இதை வைத்து ஆன்மீகம் தனித்து, மூட பழ்க்கவழ்க்கங்களையும் ,மதங்களையும் ஒன்றாக பாவித்து , இதை இரண்டையும் தவிர்த்தது ஆன்மீகம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை . அதாவது மதம் என்பது ஆன்மீகத்தின்ஒரு பிரிவு. ஆகவே மதம் வேறு ஆன்மீகம் வேறு என்பதை நான் ஏற்கவில்லை .
அப்படி மததிற்குள் வராதர்கள் நாத்தீக வாதிகள்!அங்கே (நீங்கள் சொல்லும் ) ஆன்மீகம் எப்படி?
பதில்:இதைத்தான் நான் தலைப்பில் சொல்லி இருப்பது!
ஒரு மதத்தின் கீழ் வராதவன் நாத்திகவாதி !
அப்படியா?
அப்படியானால் மதங்களின்கீழ் உள்ளவன் ஆன்மிகவாதி!
ஆதாவது மதங்கள் சொல்வது ஆன்மிகம்!
உலக மக்கள் அனைவரையும் கூறுபோட்டு பிரித்துவைத்திருக்கும் மதங்களின் தர்மம் எப்படி ஆன்மிகம் ஆகும்?...
எந்த மதத்தவன் தன்னுடைய மத தர்மப்படி நடக்கிறான்?
உலகில் ஒரு மனிதன்கூடப் பின்பற்றி நடக்காத மததர்மங்கள்தான் ஆன்மிகம் என்றால் அது ஆன்மிகம் என்ற உயர்ந்த தத்துவத்துக்கே அவமானம்!...
உலகில் ஒருவர்கூட தனது மதத் தர்மங்களினபடி நடப்பதில்லை என்றால் அதன் பொருள் என்ன?
எந்த மதமும் மனிதன் நடக்கும் வழியைச் சொல்லவில்லை என்பதே!
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?
நடக்கச் சாத்தியமான தர்மங்களின் வழிநின்று நடக்கவேண்டும்.
அதுதானே ஆன்மிகம்?
அதற்கு மதம் என்ற வேடம் எதற்கு?....
ஒவ்வொரு மனிதனும் அனைத்துலக மக்களின்மேல் அன்பு செலுத்தும், அனைத்து உலக மக்களும் ஒவ்வொருவர்மேலும் அன்பு செலுத்தும் ஒரு தர்மத்தை விட எது உயர்ந்ததாக இருக்க முடியும்?
அதைவிடச் சிறந்த ஆன்மிகமாக எது இருக்க முடியும்?...
ஒவ்வொரு மதத்தின் தர்மங்களையும் மற்ற மதத்தவர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை!
அப்படியானால் என்ன பொருள் ?
எந்த மதத்தையும் உலகம் உண்மையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதானே?
ஆன்மீகத்தை அடிப்படையாகக்கொண்டே மதங்கள் தோன்றின என்று சொல்கிறீர்கள்.
அப்படித் தோன்றி அதன்பின் சரியான நெறி நின்று நடக்கமுடியவில்லை என்றால் அவற்றைப் புறக்கணித்துவிட்டு அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஆதாரமாக துவக்கத்தில் இருந்த அடிப்படையான ஆன்மிகத்தின் வழி நிற்பது எப்படி நாத்திகம் ஆகும்?....
கேள்வி : ஒவ்வொரு மதத்தின் தர்மங்களையும் மற்ற மதத்தவர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை என்கிறீர்கள்!
மத வெறியர்கள்தான் ஏற்பதில்லை. ஆனால் மத்தை தோற்றுவித்தவர்கள் எண்ணப்படி அல்லது அதன் அடிப்படை கோட்பாடுகளின்படி யாவும் ஒன்றே!
மனிதன் பிரித்ததினால் மதங்கள் எப்படிதவறாகும்? யாவும் ஒரே கோட்பாடே!
முறையாக ஒவ்வொரு மதததினரும் பின்பற்றினால் அனைத்து மக்களும் ஒன்றாகிவிடலாம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை ஐயா!
பதில் : ஆன்மிகத்தில் இருந்துதான் மதங்கள் பிறந்தன என்றீர்கள்.
அப்படியானால் அந்த மூலத்தை ஏன் தனியாகக் கடைப்பிடிக்க முடியாது? அதை ஏன் நாத்திகம் என்கிறீர்கள்?
உலகில் உள்ள ஏதாவது ஒரு மதத்தைப் பிசகாமல் பின்பற்றும் ஏதாவது ஒரு மனிதரைச் சந்தித்த அனுபவம் உண்டா?...
பொய்களை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சமும் தயங்காத மக்கள் உண்மைகளை ஏற்றுக்கொள்ள ஏன் அச்சப்படுகிறாகள் என்பதுதான் பெரிய அவலம்!
உடம்பில் இருக்கும் அழுக்கைக் கழுவ நினைக்கும் நாம் ஏன் உள்ளத்தில் இருக்கும் அழுக்கை நீக்கத் தவறுகிறோம்?
எந்த ஒரு நிலையிலும் தவறுகளில் இருந்து சரியான நிலைக்கு மாறிச் செல்வதே உயர்ந்த ஆன்மிகம்!
அத்தகைய உயர் நிலைக்குச் செல்ல விடாமல் தடுக்கும் நிலைகள் ஆன்மிகத்துக்கு எதிரானவை அல்லவா?...
சொல்லும் செயலும் நேர்மையான சிந்தனைகளின் வழி வந்தால்தான் சிறப்பு!
சொல்லும் செயலும் நேர்மையற்றவர்களின் வழிகாட்டுதலின் வழி நடந்தால் அது எப்படித் தூய ஆன்மிகம் ஆகும்?
எல்லா மதங்களும் ஆன்மிகத்தைத் தான் வலியுறுத்துகின்றன என்றால் ஒரு மதத்தவர் இன்னொருமதத்துக்கு மாறிச் செல்வதை எந்த மதம் மகிழ்வுடன் வரவேற்கிறது?...
எல்லா மத்தத்தவர்களும் எல்லா வழிபாட்டுத்தலங்களுக்கும் சென்று வழிபடலாமே!....ஏன் அப்படிச் செய்வது இல்லை?...