கொஞ்சம் சிந்திப்போமே!...
நமது நாட்டில் லஞ்சம் வாங்குபவன் எவனாவது .......
தன்னுடைய சாதிக்காரனிடம் வாங்காமல் விட்டிருக்கிறானா?
தன்னுடைய மதத்துக்காரனிடம் வாங்காமல் விட்டிருக்கிறானா?..
தன்னுடைய ஊர்க்காரனிடம் வாங்காமல் விட்டிருக்கிறானா?
தனது மொழி பேசுபவனிடம் வாங்காமல் விட்டிருக்கிறானா?
தன்னுடைய கட்சிக்காரனிடம் வாங்காமல் விட்டிருக்கிறானா?
கடவுளுக்குப் பயந்து வாங்காமல் இருந்திருக்கிறானா?
சட்டத்துக்குப் பயந்து வாங்காமல் இருந்திருக்கிறானா?...
அப்படியெல்லாம் இல்லையென்றால் இந்தப் பெயர்களை உயர்ந்ததாக நினைப்பது வெட்கக்கேடானது இல்லையா?....
ஏன் இதை நினைத்து நமது மக்களுக்குச் சூடு சுரணை வர மறுக்கிறது?...
அப்படிப்பட்ட உணர்வு எப்போது வருமோ அப்போதுதான் நாடு உருப்படும்!
அதுவரை தேசபக்தி என்பதுகூட அர்த்தமற்ற வார்த்தையே!....
சிந்திக்க வேண்டிய வரிகள்...
ReplyDelete