இரக்கம்
ஒரு உயிரினம் உயிரிழக்கும்போது அதைப் பார்த்து ஒருவர் எப்படி வருத்தப்படுகிறார் என்பதை வைத்து அவருக்கும் மற்ற உயிரினங்கள் மேல் உள்ள ஈடுபாட்டைக் கணக்கிட முடியாது!
அதை அதனுடன் அவர் கொண்டிருக்கும் நெருக்கம்தான் முடிவு செய்கிறது!
மாமிச உணவு உண்பவர்களுள் இரக்க உணர்வு மிக்கவர்களும் மாமிச உணவு உண்ணாதவர்களுள் இரக்கம் அற்றவர்களும் கலந்ததுதான் மனித இனம்!
மாமிசத்தைப் பொருத்தவரை ஒரு உணவுப் பொருளாக மட்டும் பார்க்கிற பண்பாடு உலகம் முழுவதும் வளர்ந்துவிட்டது!
அதனால் தாய்க் கோழியைக் குழம்பு வைத்துச் சாப்பிட்டுவிட்டு அதன் குஞ்சுக்குக் காலில் காயம்பட்டதற்க்காக பரிதாபப் படுவதை நடிப்பாக இல்லாமல் இயல்பாகவே பார்க்கிறோம்.
No comments:
Post a Comment